பிக் பாஸ் சீசன் 6 இல் தாமரையின் கணவர்! அருமையாக பிளான் போட்ட ஜோடி - தீயாய் பரவும் தகவல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாமரைச் செல்வியின் கணவர் பார்த்தசாரதி அடுத்த சீசனில் பங்கேற்க போவதாக தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பிக் பாஸ் சீசன் 6 வரும் அக்டோபர் 2ம் தேதி பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் ஆரம்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருகின்றதாம்.
இதில் தாமரைச் செல்வியின் கணவர் பார்த்தசாரதி பங்கேற்க போவதாக கூறப்படுகின்றது.
பிக் பாஸ் சீசன் 5, பிக் பாஸ் அல்டிமேட் மற்றும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 என விஜய் டிவியில் பிக்பாஸ் டீமுடனே ஐக்கியமாகி விட்ட தாமரைக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளதாம்.
தற்போது கணவன் மனைவி இருவருமே மீடியாவில் பிரபலமாக பிளான் போட்டு வருகிறார்களாம்.
கடந்த வாரம் நடைபெற்ற உல்டா ரவுண்டில் தாமரைச் செல்வி இம்சை அரசனாகவும் பார்த்தசாரதி ஹீரோயினாகவும் மாறி நடனம் ஆடி இருந்தனர்.
இந்த கொடுமையெல்லாம் பார்க்கணுமா? என ரசிகர்கள் இருவரையும் பங்கமாக கலாய்த்துத் தள்ளினர்.
தாமரை ரசிகர்கள் அவர்களது முயற்சியை பாராட்டினர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தசாரதி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.