தள்ளுவண்டி கடை பாணியில் அசத்தல் தக்காளி சட்னி வேண்டுமா? இந்த ஒரு பொருளை சேத்துகோங்க
பொதுவாகவே சட்னி பிரியர்களின் விருப்ப பட்டியலில் நிச்சயம் தக்களி சட்னி முக்கிய இடம் பிடித்துவிடுகின்றது.
பெரும்பாலானவர்கள் வீட்டில் செய்யும் தக்காளி சட்னியை விடவும் ரோட்டு கடைகளிலும், தள்ளுவண்டி கடைகளிலும் கிடைக்கும் தக்காளி சட்னியை சாப்பிடுதில் தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
அந்தவகையில் தள்ளுவண்டி கடைகளில் கிடைக்கும் அதே பாணியில், அசத்தல் சுவையில் வீட்டிலேயே எப்படி தக்காளி சட்னி செய்வதென இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 2 தே.கரண்டி
வரமிளகாய் - 3
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி -சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 3-5 (காரத்திற்கு ஏற்ப)
தக்காளி - 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை - 2 கொத்து
புதினா - 1 கைப்பிடி
மிளகாய் தூள் - 1/4 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக மாறும் வரையில், நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் அளவுக்கு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரையில் நன்றாக வதக்கிய பின்னர், கறிவேப்பிலை மற்றும் புதினாவை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கி இறக்கி ஆறவிட வேண்டும்.
நன்றாக ஆறியதும், ஒரு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் தேவையான அளவுக்கு தண்ணீ ஊற்றி கலந்தால், அவ்வளவு தான் தள்ளுவண்டி கடையில் கிடைக்கும் அதே சுவையில், தக்காளி புதினா வெங்காய சட்னி தயார். புதினா சேர்ப்பதால் தான் அந்த தக்காளி சட்னிக்கு வித்தியாசமான சுவை கிடைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |