லியோ முடிந்தவுடன் தளபதி 68ஐ தொடங்கிய படக்குழு: யார் யாரெல்லாம் இருக்குறாங்க தெரியுமா? வைரல் வீடியோ
நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
தளபதி 68
கடந்த 19ஆம் திகதி பலகோடி மக்களின் எதிர்ப்பார்ப்பில் லியோ திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டையை ஆரம்பித்திருக்கின்ற நிலையில், விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று இடம்பெற்று வைரலாகி வருகின்றது.
அந்தவகையில், விஜய்யுடன் முதன்முறையாக இணைந்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 திரைப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
அதற்கான முதல் ஏற்பாடக இத்திரைப்படத்திற்காக பூஜையை விஜயதசமி நன்னாளில் இன்று நடத்தியிருக்கிறார்கள். பிகில் படத்திற்கு பின் விஜய்யுடன் ஏ ஜி எஸ் நிறுவனம் இரண்டாவது முறையாக இப்படத்தில் தயாரிக்கவுள்ளது
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், யோகி பாபு, விடிவி கணேஷ், பிரேம்கி, வைபவ், அரவிந்த் ஆகாஷ் மற்றும் அஜய் ராஜ் என ஒரு பட்டாளமே நடிக்க இருக்கிறார்கள்.
மேலும், இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். அதுமாத்திரமல்லாது 2003 இன் புதிய கீதைக்குப் பிறகு விஜய் மற்றும் யுவன் மீண்டும் இத்திரைப்படத்தில் இணைவது குறிப்பிடத்தக்கது.
On this auspicious day #Thalapathy68 @actorvijay Sir's #PadaPoojai video is here#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh@vp_offl @thisisysr @actorprashanth @PDdancing #Mohan #Jayaram @actress_Sneha #Laila @meenakshiioffl @iYogiBabu #AGS25 pic.twitter.com/85ROtXein1
— AGS Entertainment (@Ags_production) October 24, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |