தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் - சொத்து மதிப்பு எவ்வளவு?
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய்
இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையில் தற்போது பல பிரச்சனைகள் போய்கொண்டு இருக்கிறது.
ஒரு பக்கம் அரசியல் இன்னுமொரு பக்கம் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை.

அவரது மனைவி சங்கீதா சொர்ணலிங்கம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்க்கு இன்னுமொரு நடிகையுடன் தொடர்பு இருப்பதால் விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜயின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது பற்றி பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சொத்து மதிப்பு
சியாசத் அறிக்கையின்படி, தளபதி விஜய்யின் நிகர மதிப்பு சுமார் 600 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான அவர், ஒரு படத்திற்கு 100 கோடி முதல் 275 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.
சென்னை வீடு - சென்னை நீலாங்கரையில் கடற்கரையை நோக்கிய ஒரு ஆடம்பரமான மாளிகையை அவர் வைத்திருக்கிறார், அதன் மதிப்பு ரூ.70-80 கோடி என்று TOI தெரிவித்துள்ளது. அதில் ஒரு தனியார் உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம் மற்றும் அழகான தோட்டங்கள் உள்ளன.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |