தகர டப்பா மூஞ்சி என கலாய்த்தவர்களுக்கு முன்னால் தளபதியாக எழுந்த விஜய்யின் அரிய புகைப்படங்கள்
நடித்த முதல் திரைப்படத்தில் தன் முகத்தோற்றத்தால் பல கேலி கிண்டலுக்கு ஆளான விஜய்யின் அரிய புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
இளைய தளபதி விஜய்
இயக்குனர் சந்திரசேகரனின் மகனான விஜய் 1992ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தில் அறிமுகமானர். அன்று ஆரம்பித்த இவரின் சினிமா பயணம் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
இவர் இலங்கையைச் சேர்ந்த சங்கீதா என்றப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தம்பதிகளுக்கு தற்போது திவ்யா சாஷா மற்றும் ஜேசன் சஞ்சய் என இரு குழந்தைகள் இருக்கிறார்கள்.
விஜய் நடிப்பில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் விஜய்யின் 68ஆவது திரைப்படத்தை வெங்கட் பிரபுதான் இயக்க இருக்கிறார்.
அரிய புகைப்படங்கள்
விஜய்யின் முதல் திரைப்படம் வெளியான வேளையில், அவரின் முகத்தையும் உருவத்தையும் வைத்து தகர டப்பா மூச்சி என பலரும் கேலி செய்தார்கள்.
ஆனால் அவற்றையெல்லாம் கண்டுக்கொள்ளாத விஜய் தன்போக்கில் நடித்து தன்னை கேலி செய்தவர்களுக்கு இளைய தளபதி என்ற பெயர் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் அன்று இவரை தவறாக பேசிய எழுதிய பத்திரிக்கைகள் எல்லாம் இன்று இவரின் வளர்ச்சியை பாராட்டி பக்கம் பக்கமாக எழுதிகிறார். இப்படி மிகப்பெரிய வளர்ச்சியடைந்த விஜய்யின் அந்த கால புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |