ஜனநாயகன் திரைப்படம் எப்போது ரிலீஸ் ?
எச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் ஹீரோவாக நடித்த ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் தேதி தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.

ஜனநாயகன்
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை தூண்டியுள்ள திரைப்படம் என்றால் அது ‘ஜனநாயகன்’ தான்.
நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைந்ததால் அவர் இனிமேல் சினிமாவில் இருக்க மாட்டார் என ரசிகர்களுக்கு அறிவித்தார். மேலும் இந்த ஜனநாயகன் திரைப்படம் தான் அவருடைய கடைசி திரைப்படம் எனவும் கூறி இருந்தார்.

இப்படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கி உள்ளார். பொதுவாக வினோத்தின் திரைப்படங்கள் வித்தியாசமான திரைக்கதைகளாலும் சமூக கருத்துக்களைக் கொண்ட வணிக திரைப்படங்களாகவும் இருக்கும்.
இதனால் ரசிகர்களால் ஜனநாயகன் திரைப்படம் எப்போது வெளியாகும் எதிர்பாத்துக்கொண்டிருந்தனர். அதன்படி தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது.

எப்போது ரிலீஸ்
‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூன் மாத வெளிவருவதாக தற்போது ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் இதற்கான டிக்கட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வருவதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த திரைப்படம் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அதையொட்டி ஜூன் 19ந் தேதி படம் வெளியாக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளது.

இந்த படத்திற்கு ‘U/A 16+’ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மக்கள் மத்தியில் இதற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதோடு, அவர் அரசியல் வாழ்க்கையில் புதிய கட்டத்தை எட்டிய பிறகு வெளியாகும் முதல் படம் என்பதாலும் மக்கள் இந்த படத்தை எதிர்த்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த தகவல் முழுமையாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இணையத்தில் கசிந்த விடயங்கள் தான் இவை என்பது கு2றிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |