அஜித் பைக் பிரியர் என்றால் விஜய்க்கு கார் பிரியமாம்.... என்னென்ன கார் வைத்திருக்கிறார் தெரியுமா?
உச்ச நடிகர்கள் என்றால் சொகுசுக்கு பஞ்சம் இருக்காது அப்படி சினிமாவில் டாப் நடிகராக இருக்கும் விஜய்யிடம் என்னென்ன கார்கள் இருக்கிறதென தெரியுமா?
நடிகர் விஜய்
விஜய் எப்போதும் ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கையை வாழ்பவர். அதனாலும் கூட அவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. விஜய் நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் அதிக வசூலைப் பெற்றிருந்தது.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் விஜய்யின் 68ஆவது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாகவும், அதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
விஜய்யின் சொகுசு கார்கள்
தற்போது விஜய் பற்றிய பல விடயங்கள் இணையத்தில் வைரலாகி வந்த வண்ணம் தான் உள்ளது. அந்த வகையில் தற்போது அவர் வைத்திருக்கும் கார்களின் விபரம் வெளியாகியுள்ளது.
அண்மையில், விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சய் நேர்காணல் ஒன்றில் விஜய் வாங்கிய கார்களைப் பற்றி கூறியிருக்கிறார்.
- டாடா எஸ்டேட் 1992 – 2000 மாடல்
- டொயோட்டா செரா 1990 - 1996 மாடல்
- டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா
- ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் பாண்டம்
- BMW X6 – 2008–தற்போதைய மாடல்
- நிசான் எக்ஸ்-டிரெயில் - 2000
- ஆடி ஏ8 பிரீமியர் 118 NE
- மினி கூப்பர் எஸ்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |