தலைநகரம் பட நடிகையா இது? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே
தலைநகரம் பட நடிகை ஜோதிர்மயியின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை ஜோதிர்மயி
சுந்தர் சியின் தலைநகரம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் ஜோதிர்மயி. அவர் நான் அவன் இல்லை, அறை எண் 305ல் கடவுள், பெரியார் போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார்.
தமிழில் அவர் கடைசியாக நடித்து இருந்த படம் வெடிகுண்டு முருகேசன். அதற்கு பிறகு தமிழில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
குறுகிய காலம் மாத்திரமே தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகைகளுள் இவரும் ஒருவர். முக்கியமாக நடிகர் வடிவேலுவுடன் அவர் நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படுகிறது.
இவருக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு நிஷாந்த் குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் விவாகரத்தில் முடிவடைந்தது.
அதன் பின்னர் ஜோதிர்மயி மலையாள இயக்குனர் அமல் நீரட் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்பதால் தற்போது மலையாளத்தில் மட்டும் அவர் நடித்து வருகிறார்.
ஜோதிர்மயி தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார். முடி வெள்ளையாகி இப்படி மாறிட்டாரே என இவரது தற்போதைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |