ரோட்டோர கடையில் டீ குடித்த தல அஜித்! கோடிக்கணக்கில் பணமிருந்தும் இப்படியா? அந்த மனசு தான் கடவுள்
ரோட்டோர கடையில் அமர்ந்து நடிகர் அஜித் டீ குடிக்கும் போதும் எடுத்த அன்சீன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
கடந்த மாதம் ஆரம்பித்த தல அஜித்தின் ஒரு மாத பைக் ட்ரிப் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இதையடுத்து அஜித் சென்னை வந்துவிட்டார். இங்கு சில நாட்கள் ஓய்வெடுத்த பின்னர் மீண்டும் ஏகே 61 படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார்.
இதனிடையே அஜித் பைக் ட்ரிப்பின் போது எடுக்கப்பட்ட அன்சீன் புகைப்படங்கள் சில வெளியாகி வைரலாகி வருகின்றது.
கோடிக்கணக்கில் பணமிருந்தும் மாறாத மனசு!
அந்த புகைப்படங்களில் ரோட்டோர கடையில் அமர்ந்து தல அஜித் உணவருந்தும் போதும், டீ குடிக்கும் போதும் எடுத்த புகைப்படங்களும் இடம்பெற்று உள்ளன.
அதில் அஜித்தின் எளிமையை பார்த்து வியந்துபோன அவரது ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.
கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்து வைத்திருந்தாலும் இப்படி ஒரு எளிமையான மனது இருப்பதால் தான் அவரை வெற்றிகள் தேடி வருகின்றது.