செரிமான பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் இஞ்சி சட்னி... இப்படி செய்து சாப்பிடுங்க
தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் அதிகமாக துரித உணவுகளை நுகர்வதன் காரணமாக அடிக்கடி மலச்சிக்கல், வயிற்று உப்புசம், வயிற்று வலி போன்ற செரிமான கோளாறுகளை சந்திக்க வேண்டி ஏற்படுகின்றது.
அந்த வகையில் செரிமான பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் உணவுகளின் பட்டியில் இஞ்சி முக்கிய இடம் வகிக்கின்றது.
உடலில் சுரக்கும் மூன்று திரவங்கள் செரிமானம் நடைப்பெருவதற்கு இன்றியடையாதது. எச்சில் (Saliva), செரிமான அமிலம் (Hcl), கல்லீரலில் சுரக்கும் நொதியான பைல் (Bile). இந்த மூன்று திரவங்களின் சுரப்பையும் மேம்படுத்தும் தன்மை இஞ்சியில் காணப்படும் வேதிப்பொருட்களுக்கு உண்டு.
இஞ்சியில் காணப்படும் ஜிஞ்சரால் (Gingerol) எனும் எண்ணெய்யானது ,வயிற்றில் செரிமான அமிலம் உணவைக் கரைக்கும்போது வெளிப்படும் வாயுவை வயிறு, குடல், உணவுக்குழாயில் தேங்கவிடாமல் ஏப்பம் மூலமாக வெளியேற்ற துணைப்புரைிகின்றது.
இப்படி ஒட்டுமொத்த செரிமான பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் இஞ்சியில் எவ்வாறு அசத்தல் சுவையில் சட்னி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
தோல் நீக்கி நறுக்கிய இஞ்சி - 2 துண்டுகள்
காஷ்மீர் மிளகாய் - 5
வர மிளகாய் - 2
பூண்டு - 5 பல்
உளுந்தம் பருப்பு - 1 தே.கரண்டி
கடலைப் பருப்பு - 1 தே.கரண்டி
புளிச்சாறு - 2 தே.கரண்டி
வெல்லம் - 1 தே.கரண்டி
எண்ணெய் - 1தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையானவை
எண்ணெய் - 1 தே.கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயம் - 1 சிட்டிகையளவு
செய்முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் புளியை போட்டு 10 நிமிடம் ஊறவைத்து புளிச்சாறு எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து இஞ்சியை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரமென்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து 3 நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்கி அதனை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு அதே பாத்திரத்தில் உளுந்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து நன்றாக பொன்னிறமாக மாறும் வரையில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதில் மிளகாயை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து, வறுத்த பொருட்களை ஆறவிட வேண்டும்.
பின்னர் ஒரு மிக்சி ஜாருக்கு மாற்றி அதனுடன் புளி மற்றும் வெல்லம் சேர்த்து சட்னி பதத்திற்கு நன்றாக அரைத்து ஒலு கிண்ணத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சுமானதும் கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து அதனை சட்னி மீது ஊற்றினால் அவ்வளவு தான்,ஆரோக்கியம் நிறைந்த இஞ்சி சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |