தவம் கிடந்த அஜித் ரசிகர்கள் இறுதியில் சாமியாடுபவரிடம் குறி கேட்ட அதிர்ச்சி! ஏன் தெரியுமா? தீயாய் பரவும் காட்சி
வலிமை திரைப்படம் தொடர்பாக சாமியாடுபவரிடம் அஜித் ரசிகர்கள் குறி கேட்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது.
எப்போதோ,படப்பிடிப்பு முடிந்து வலிமை படம் திரைக்கு வந்திருக்க வேண்டும். கொரோனா காரணமாக படம் தள்ளி போனது. இதற்கிடையே, அஜித் ரசிகர்கள் வலிமை படம் தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எதாவது ஒரு தகவல் வராதா என தவம் கிடக்க தொடங்கினர்.
ஒருகட்டத்தில் அஜித் ரசிகர்கள் பலரிடமும் வலிமை அப்டேட் கேட்க தொடங்கினர்.
அநியாயம் பண்றானுங்க நம்ம பசங்க???? வலிமை அப்டேட்#ValimaiUpdate #AjithKumar pic.twitter.com/ca7Xw5mJTd
— குமரி மாவட்ட தல ரசிகர்கள் (@Kumarimavatam71) July 4, 2021
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கிரிக்கெட் வீரர்கள் மொயின் அலி, அஸ்வின் என அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்காத ஆட்களே இல்லை என்று கூறலாம்
இந்நிலையில், சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில், சாமி ஆடும் நபர் ஒவரிடம் சிலர், ஐயா வலிமை அப்டேட் சொல்லுங்க என்று கூறுகின்றனர். சாமி ஆடுபவரிடமே வலிமை அப்டேட் கேட்கும் அஜித் ரசிகர்களின் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.