தக்காளி, வெங்காயம் மட்டும் இருந்தாலே போதும்! இப்படி குழம்பு செய்து அசத்துங்க
நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் முக்கியமான பொருள் தக்காளி, இதில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது, குறிப்பாக வைட்டமின் ஏ அதிகம் காணப்படுகிறது.
வைட்டமின் சியும் அதிகம் இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
இதனை கொண்டு சுவையான குழம்பு செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 8 முதல் 10 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
பூண்டு- 3
பட்டை, கிராம்பு- சிறிதளவு
சோம்பு- அரை டீஸ்பூன்
பட்டை வத்தல்- 2
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
மல்லித்தூள்- 1 டீஸ்பூன்
மிளகாய்- 1 அல்லது 2 டீஸ்பூன்
எண்ணெய்- 2 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை- சிறிதளவு
CREDIT: GETTY / DEV IMAGES
தேங்காய் அரைக்க
தேங்காய்- கால் கப்
சீரகம்- அரை டீஸ்பூன்
சோம்பு- கால் டீஸ்பூன்
செய்முறை
முதலில் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு- உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும், இதனுடன் சோம்பு, பட்டை, கிராம்பு சேர்த்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கிவிடவும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் நறுக்கி வைத்துள்ள பூண்டு சேர்த்து, கறிவேப்பிலை சேர்க்கவும்.
இதனுடன் பட்டை வத்தல் சேர்த்து வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்க்கவும்.
அடுத்ததாக மசாலா பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு கிளறிவிடவும், தக்காளி நன்றாக வெந்ததும் மசித்து விடவும், இதனுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதி வந்தபின்னர், அரைத்து வைத்துள்ள தேங்காய் பாலை சேர்த்தால் சுவையான தக்காளி குழம்பு தயாராகிவிடும்!! கடைசியாக கொத்தமல்லி இழை தூவி பரிமாறவும், தோசை, இட்லி, சாதம் என அனைத்திற்கும் இந்த குழம்பை ருசிக்கலாம்!!!