சுவரை உடைத்து வீட்டின் உணவை ருசிக்கும் யானை- இணையத்தில் வைரலாகும் காணொளி!
தாய்லாந்தில் யானை ஒன்று அடிக்கடி ஒரு வீட்டுக்கு விருந்தினர் போல ஜாலியாக விசிட் அடித்து வருகிறது.
அதிலும், அந்த வீட்டிலேயே சமயலறையை குறிவைத்து எண்ட்ரி கொடுத்து வருகிறது இந்த யானை. மேலும், யானை அடிக்கடி வந்துபோவது வழக்கமாகிவிட்டதால் வீட்டின் உரிமையாளரும் ஆச்சரியமடையவில்லை.
யானை தன் வீட்டுக்கு விசிட் அடித்த வீடியோவை வீட்டின் உரிமையாளர் கிட்டிசாய் பூட்சான் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
மேலும், வீட்டின் உரிமையாளர் கிட்டிச்சாய் பூட்சான் தாய்லாந்தில் உள்ள தேசிய பூங்கா அருகே வசிக்கிறார். அவர் வீட்டுக்கு அருகே உள்ள ஏரியில் யானைகள் நீர் அருந்த வருவது வழக்கம். எனவே, அவர் வீட்டுக்கு அடிக்கடி யானைகள் வருவது வாடிக்கையாகியுள்ளது. இதை பலரும் கண்டு வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
A family in Thailand awoke to a hungry Asian elephant busting through their wall and rummaging in the kitchen. The elephant, which is reportedly known to occasionally cause trouble for humans in the area, was likely attracted to the smell of food ? pic.twitter.com/bn9s74NeGu
— NowThis (@nowthisnews) June 22, 2021