தை அமாவாசை என்ன நேரத்தில் தர்ப்பணம் அளிக்க வேண்டும்?
2023ம் ஆண்டு வரும் 21-ந் திகதி தை அமாவாசை தினமாகும். இந்த தினமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தினமாக கருதப்படுகின்றது.
அமாவாசை திதியானது அதிகாலை 04.25 மணிக்கு துவங்கி, ஜனவரி 22ஆம் திகதி அதிகாலை 03.20 மணி வரை உள்ளது.
என்ன செய்ய வேணடும் ?
இந்த தை அமாவாசை தினத்தில் நாம் கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், புத்தாடைகள் ஆகியவற்றை நாம் தானமாக அளித்தால் மிகவும் நல்லது. இவ்வாறு செய்வதன் மூலமாக நம் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும்.
ஏழை, எளிவர்களுக்கு தானம் செய்வதன் மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் வந்தடையும்.
தை அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது போல, ஏழை,எளிய மக்களுக்கு தானம் செய்ய வேண்டியதும் கட்டாயம் ஆகும்.
தை அமாவாசை தினத்தில் நமது மூதாதையர்களை நினைவுபடுத்தும் விதமாக தாத்தா, கொள்ளுதாத்தா, எள்ளுதாத்தா, பாட்டன், பூட்டன் என நமது தலைமுறையினரையும் நினைவில் கொண்டால் நல்லதே நடக்கும்.
விரதம் இருக்கும் முறை
- அமாவாசை திதியன்று, ஆறு கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீராடி, முன்னோக்களுக்கு பிடித்த உணவுகளை படையல் வைத்து தர்ப்பணம் செய்து விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.
- சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள், தண்ணீர், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும்.
- இந்த ஆறு பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு படைத்தால் போதும்.
- இந்தத் தர்ப்பனமானது பித்ருக்களுக்கு ஏதேனும் குறைகள், கோபங்கள் இருந்தால், அவர்களின் மனதை குளிரச் செய்து நம் குடும்பத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காதபடி காக்கும்.