இந்த ஆண்டு எலெக்ட்ரிக் கார் வராது! எலான் மஸ்க்கின் அதிரடி அறிவிப்பு;
உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா கடந்த ஆண்டில் 65 சதவீதம் அதிக வருவாய் பெற்றுள்ளது. வரலாறு காணாத வகையில் சுமார் 5.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தை பெற்றுள்ளது.
இதற்கு பின்பி பேசிய எலான் மஸ்க். தற்போது, நிறுவனம் மொத்தமும் முழுத் தானியங்கி காருக்கான மென்பொருளைத் தயாரிக்கும் ஆராய்ச்சியில் உள்ளது. இந்த மென்பொருளின் வெற்றி உலகளவில் டெஸ்லா கார்களின் விற்பனையை பெரிய அளவில் நம்புவதாகக் கூறினார்.
இதேபோல நீண்ட காலமாக எதிர்ப்பார்த்து காத்திருக்கும் டெஸ்லா-வின் 25000 டாலர் மதிப்பிலான பட்ஜெட் எலக்ட்ரிக் கார் 2022-ல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எலான் மஸ்க் பட்ஜெட் கார் தயாரிக்கும் திட்டத்தில் இப்போது இறங்கப்போவது இல்லை என உறுதியாக அறிவித்துள்ளார்.
புதிய கார் அறிமுகம் செய்தால் தற்போது இருக்கும் வாகனங்களின் உற்பத்தி குறைந்து விடும். இதனால் 2022ல் எந்தப் புதிய கார்களும் அறிமுகம் செய்யப்படப் போவது இல்லை எனத் திட்டவட்டமாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் எலான் மஸ்க் மஸ்க் மனித வடிவிலான ரோபோ தயாரிக்கும் திட்டத்தை கையில் எடுத்து இந்த வருடம் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.