டெஸ்லா நிறுவனம் கடந்த ஆண்டில் நிகழ்த்திய புதிய சாதனை..!
உலகில் பலவிதமான கார்களுக்கு மவுசு இருந்தாலும், டெஸ்லா காருக்கான மவுசு எப்போதும் குறைவதில்லை. இந்த எலெக்ட்ரிக் கார் ஆனது பல சாதனைகளை படைத்து வருகிறது.
அந்த வகையில், கடந்த 2021-ல் டெஸ்லா (Tesla) நிறுவனம் 936,172 வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. 2020-ஐ காட்டிலும் 2021-ல் இதன் விற்பனை 87% அதிகரித்து இருக்கிறது.
டெலிவரி செய்யப்பட்ட வாகனங்களில் மாடல் S மற்றும் X ஆகியவைகளில் 11750 கார்களும், மாடல் 3 மற்றும் Y ஆகியவைகளில் 296,850 கார்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மற்றவைகளுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட 936,172 வாகனங்களில் 3 மற்றும் Y ஆகிய மாடல்கள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. S மற்றும் X ஆகிய மாடல்களில் 24,964 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
இதுமட்டுமின்றி, டெஸ்லா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அதன் விற்பனை சதவீதத்தி 50% அதிகரிப்பதையே திட்டமாக கொண்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க் தொழிலார்களிடம் காலாண்டு இறுதிக்குள் டெலிவரி செய்வதை நிறுத்திவிட்டு செலவுகளை குறைப்பதில் கவனம் செலுத்துமாறு கூறினார்.