இந்த கோவிலில் பெண்களுக்கு அனுமதியில்லை! என்ன காரணம்?
பொதுவாகவே கோவிலுக்கு ஆண்கள், பெண்கள் மற்றும் மதசார்பற்று யார் வேண்டுமானாலும் செல்லலாம் என்பது வழக்கம்.
ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
அப்படியா ஏன்? இந்த கேள்வி உங்கள் அனைவருக்கும் இருக்கும், இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பிரதான சாலை அருகே அமைந்துள்ளது தொன்மை வாய்ந்த ஸ்ரீ வீரகுமார் திருக்கோயில்.
600 ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாக முருகனின் அவதாரமாகிய ஸ்ரீ வீரகுமார சுவாமி முற்புதர்களுக்கு இடையில் தோன்றியதையடுத்து அப்பகுதி மக்கள் முற்புதர்களை சுத்தம் செய்து ஸ்ரீவீரகுமாரை வழிபட ஆரம்பித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து 16 ஆம் நூற்றாண்டிலேயே முழுமையாக சீரமைக்கப்பட்டு கோவிலாக வடிவமைக்கப்பட்டு 1974 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் இடம்பெற்றுள்ளது.
அதிகாலை முதல் அனைத்து வகையான பூஜைகளும் முறையாக நடந்தேறி வருகின்றன. இத்தனை சிறப்பு மிக்க கோவிலில் வழிப்பாடு தொடங்கிய காலம் முதல் கோவிலின் மூல சன்னதிக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
என்ன காரணம்?
ஆண்கள் மட்டுமே அனைத்து பூஜைகளிலும் கலந்துக்கொள்கின்றனர், பெண்கள் சன்னதியின் முன் மண்டபம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகின்றது.
இவ்வாறு இக் கோவிலில் சன்னிதானத்திற்குள் பெண்கள் இனுமதிக்கப்படாமைக்கு என்ன காரணம்? இதற்கு ஒரு வரலாற்று கதை கூறப்படுகின்றது.
ஸ்ரீ வீரகுமார் ஆதிசக்தியின் அருளை பெற கடுமையாக தவம் செய்துக்கொண்டிருந்த வேலையில் ஒரு பெண்ணின் ஆவி இவரின் தவத்தை கலைத்ததாகவும், அதனால் ஆதிசக்கியின் அருளை பெறமுடியாமல் போனதாகவும் கூறப்படுகின்றது.
இதனால் கடும் கோபமடைந்த ஸ்ரீ வீரகுமார சுவாமிகள் குறித்த பெண்ணின் ஆவியை சுட்டெரித்ததாகவும், இதன் பின்னர் தனது சன்னதிக்குள் எந்த பெண்ணுக்கும் இடம் இல்லை என கடுமையாக நிபந்தனையை விதித்ததால் அது இன்றுவரை கடைப்பிடிக்கப்படுவதாக வரலாறு காணப்படுகின்றது.
இந்தனை சிறப்பு மிக்க கோவிலின் சன்னதிக்குள் மாத்திரமே பெண்கள் பிரவேசிக்க அனுதியில்லை.
இதை தவிர அவர்கள் கோவிலுக்குள் வருவதற்கும் தங்களின் பிராத்தனைகளை நிறைவேற்றிக்கொள்ளவும் எதுவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவிலை்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |