சினேகா - பிரசன்னா குடும்பத்தின் பொங்கல் கொண்டாட்டத்தை பாருங்க... வைரல் புகைப்படங்கள்!
44 வயதிலும் இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் குறையாத அழகுடன் ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் நடிகை சினேகா.
இவர் தனது காதல் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் அசத்தலாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

நடிகை சினேகா
தமிழில் என்னவளே என்றத் திரைப்படம் மூலம் சினேகா அறிமுகமாகினாலும், விஜய்யுடன் வசீகரா படத்தில் நடித்தன் பின்னர் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யம் ஆனார்.
அதன்பின்னர் சினேகாவின் அடுத்தடுத்த படங்கள் எல்லாம் ஹிட் கொடுத்தது. இவரது நடிப்பிற்கு மட்டுமல்ல சிரிப்பிற்கும் அவ்வளவு ரசிகர்கள் இருக்கின்றார்கள்.

நடிகர் பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு எனும் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் சினேகா. அதன் பின்னர் இருவருக்கும் இடையில் காதல் மலர அது திரையுலகமே அசந்து போகும் அளவிற்கு திருமணத்தில் முடிந்தது.

இந்த தம்பதியினருக்கு விஹான் (Vihaan) என்ற மகனும், ஆத்யந்தா (Aadhyantaa) என்ற மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பின்னரும், சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சினேகா சிறப்பான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.

இந்நிலையில், தனது குடும்பத்துடன் பாரம்பரிய ஆடையில் அசத்தலாக பொங்கல் பண்டிகையை கொண்டாடி நடிகை சினேகா தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |