மங்களம் மாமியாராக மாறிய நடிகை குஷ்பூ! மீண்டும் சீரியலில் அதிரடியாக களமிறகும் ப்ரோமோ... எந்த சீரியல் தெரியுமா?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கோகுலத்தில் சீதை சீரியலில் மங்களம் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை குஷ்பூ நடிக்க உள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2019 ஆம் ஆண்டு முதல் கோகுலத்தில் சீதை சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
கதாநாயகனாக டான்ஸ் மாஸ்டராக இருந்த நந்தாவும், கதாநாயகியாக புதுமுக நடிகை ஆஷா கவுடாவும் நடித்து வருகின்றனர்.
வெள்ளித்திரையில் பிரபலமாக இருந்த நடிகைகள் நளினி, வடிவுக்கரசி ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த தொடருக்கு இன்னும் மவுசு சேர்க்கும் விதமாக நடிகை குஷ்பூ இணைந்துள்ளார். 90 களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த அவர், கதாநாயகி அந்தஸ்துக்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்தார். பின்னர் சின்னத்திரையில் கால்பதித்த குஷ்பு, குங்குமம், கல்கி உள்ளிட்ட பல தொடர்களில் வரிசையாக நடித்தார்.
தற்போது மீண்டும் சீரியல் பக்கம் திரும்பியுள்ளார்.