அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் டெலிகிராம் வெர்ஷன் 8.5
பிரபல செயலியான டெலிகிராம் தனது ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு யூசர்களுக்கு, லேட்டஸ்ட் அப்டேட் வழியாக பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, சமீபத்திய அப்டேட்டில் Bug Fixes உடன் சேர்த்து வீடியோ ஸ்டிக்கர்ஸ், மற்றும் மெசேஜ் ரியாக்ஷன்ஸ், பல புதிய அம்சங்களையும் கொண்டு வருகிறது. டெலிகிராம் நிறுவனம் ஒரு ப்ளாக் போஸ்ட் வழியாக இந்த லேட்டஸ்ட் அப்டேட் குறித்து அறிவித்தது.
இந்த அம்சங்கள் அனைத்தும் வரும் நாட்களில் பயனாளர்களுக்கு வந்தடையும்,. டெலிகிராமின் லேட்டஸ்ட் வெர்ஷன் 8.5 அப்டேட் வழியாக வரும் புதிய அம்சங்களை பற்றி பார்ப்போம்.
வீடியோ ஸ்டிக்கர்ஸ்
அனிமேஷன் ஸ்டிக்கர்ஸ் மற்றும் டெலிகிராமில் அணுக கிடைக்கும் பிரபலமான அம்சங்களில் ஒன்றாகும். இதற்கு முன் இந்த ஸ்டிக்கர்களை உருவாக்க ஸ்பெஷல் சாப்ட்வேர்கள் தேவை ஆனால் இந்த புதிய அப்டேட்டின் மூலம் டெலிகிராம் நிறுவனம், வழக்கமான வீடியோக்களிலிருந்து கன்வெர்ட் செய்யப்படும் ஸ்டிக்கர்களுக்கான ஆதரவைச் சேர்க்கிறது.
இதனால், பயனர்களும் எந்தவொரு வீடியோ எடிட்டிங் டூலையும் பயன்படுத்தி அனிமேஷன் ஸ்டிக்கர்களை எளிதாக உருவாக்க முடியும்.
ரியாக்ஷன்ஸ்
இந்த ரியாக்ஷன்ஸ் மிகவும் கச்சிதமான அனிமேஷன்களை பெறுகின்றன. இவை டெலிகிராமின் வெர்ஷன் 8.5 அப்டேட் ஆனது 'ஸ்மாலர் ரியாக்ஷனை' கொண்டு வருகிறது.
நேவிகேஷன்
இதில், டெலிகிராம் நிறுவனத்தின் படி, அன்ரீட் சேனல்கள் வழியாகச் செல்லும்போது அல்லது சாட்களுக்கு இடையே நகரும் போது, பயனர்கள் குறிப்பிட்ட சாட்டிற்கு திரும்பி செல்ல "பேக்" பட்டனை லாங் பிரெஸ் செய்யலாம்.
தவிர பார்வேட் மெசேஜ்கள், லிங்க்ஸ், யூசர் நேம்ஸ், ப்ரொபைல்ஸ் மற்றும் பலவற்றிலிருந்தும் கூட குறிப்பிட்ட சாட்களுக்கு திரும்ப முடியும்.
பக் பிக்ஸஸ் (Bug Fixes)
புதிய வெர்ஷன் 8.5 அப்டேட் ஆனது மேம்படுத்தப்பட்ட கால் குவாலிட்டியைக் கொண்டுவருகிறது. மேலும் இன்ஸ்டன்ட் வியூ பேஜ்களை மொழிபெயர்ப்பதற்கான ஆதரவையும் சேர்த்துள்ளது.
டஜன் கணக்கான சிறிய மேம்பாடுகளுடன், ஷேரிங் மெனுவிலிருந்து சைலன்ட் மெசேஜ்களை அனுப்பும் விருப்பத்தையும் டெலிகிராம் நிறுவனம் சேர்த்துள்ளது.
அதிலும் குறிப்பாக ஐ.ஓ.எஸ் யூசர்கள், டேப் பாரில் உள்ள ஐகான்களை தட்டும்போது புதிய அனிமேஷன்களை பெறுவார்கள் என்று டெலிகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.