பெற்றோரை கொலை செய்த மகன்! நான்கு பேரின் பிணத்தோடு நான்கு மாதம் வாழ்ந்த கொடூரம்
தனது குடும்பத்தினர் நான்கு பேரை கொலை செய்து, அவர்களின் சடலத்துடன் நான்கு மாதம் வாழ்ந்துள்ள நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் கலியாசக் காவல் நிலைய பகுதியில் உள்ள குருடோலா கிராமத்தில் ஆசிப் முகமது(19). இவர் தனது தந்தை ஜவாத் அலி (50), தாய் ஈரா பிபி (45), சகோதரி அரிஃபா கதுன் (17) மற்றும் பாட்டி அலெக்ஜன் பிபி (75) மற்றும் சகோதரர் ஒருவருடனும் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த குடும்பத்தில் ஏற்பட்ட பண தகராறில் வாலிபர் அனைவரையும் கொலை செய்ய முடிவெடுத்து, அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தார்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஆசிப் குடும்ப உறுப்பினர்களக்கு தூக்க மாத்திரையை பாலில் கலந்து கொலை செய்துவிட்டு, அவர்களை வீட்டின் தோட்டத்தில் புதைத்துள்ளார்.
ஆனால் இவரிடமிருந்து ஒரு சகோதரர் மட்டும் தப்பித்து தலைமறைவாகியுள்ளார். மேலும் அக்கம் பக்கத்தினரிடம் ஆசிப் தனது பெற்றோர்கள் அனைவரும் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளதாக பொய் கூறி நான்கு மாதம் அங்கேயே வசித்து வந்துள்ளார்.
தற்போது தலைமறைவாகியிருந்த ஆசிப்பின் சகோதரர் பொலிசாரிடம் புகார் அளித்த பின்பு உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தலைமறைவாகியிருந்த சதீப்பை பொலிசார் கடந்த சனிக்கிழமையன்று கைது செய்துள்ளனர்.