என் டெடி பியர் பொம்மையை வெட்டுறாங்களே.. பிறந்த நாளில் கதறிய சிறுவன்!
சீனாவில் உள்ள தைவான் நகரில் சியாங் என்ற சிறுவனின் 2-வது பிறந்த நாளை வீட்டிலேயே கொண்டாடியுள்ளனர் இவனது குடும்பத்தினர்.
அப்போது, அந்த சிறுவனுக்கு பிடிதத்த ஆசையாக வளர்க்கும் டெடி பியர் போன்றே கேக்கை வாங்கியுள்ளனர்.
இதைக்கண்ட அந்த சிறுவன் ஆரம்பத்தில் தன் டெடி பியர் அமர்ந்திருப்பது போன்றே மகிழ்ச்சியடைந்துள்ளான். அதன் பின்னர், அந்த சிறுவன் கைகளை தட்டி மெழுகுவர்த்திகளை ஊதினான்.
சிறுது நேரம் கழித்து அவனது தாயார் அந்த கேக்கை வெட்டியதை பார்த்ததும் அவனது தாயை அடித்து அடித்து கதறி அழுதான்.
தான் ஆசையாக வளர்க்கும் டெடி பியரை வெட்டுகிறார்களே என துக்கம் தாங்காமல் அந்த பிறந்த நாள் குழந்தை கதறி கதறி அழுதது, இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.