ஆசிரியர் தினம் 2023: இந்த ஆண்டு உங்கள் ஆசிரியருக்கு இப்படி வாழ்த்துக்கள் சொல்லுங்க..
இந்தியாவின் இரண்டாவது குடியரசு தலைவராக பணியாற்றிய சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆசிரியர் தினம்
இந்த தினங்களில் ஆசிரியர்களை மாணவர்கள் தங்களின் கௌரவத்தை கொடுத்து மரியாதையை செலுத்துவார்கள்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என தெய்வத்திற்கு மேலாக மதிக்கப்படும் ஆசிரியர்களின் இந்த தினம் அனைத்தை ஆசிரியர்களை கௌரவப்படுத்துகின்றது.
இதனை தொடர்ந்து இந்த தினத்தை சிறப்பிற்கும் விதமாக மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் விழாக்கள் நடத்துவார்கள். பொதுவாக இன்றும் உலகத்தில் சாதித்த அனைவரின் பின்னால் இருந்து வேலைப்பார்த்தது கண்டிப்பாக ஒரு ஆசானாக தான் இருப்பார்கள்.
பெண்கள் இடத்திற்கேற்ப கௌரவப்படுத்தப்படுவார்கள். ஆண்கள் ஆசிரியர்களாக இருப்பதை விட பெண்கள் தான் இந்த துறையில் அதிகமாக இருக்கிறார்கள்.
அனைத்து பிள்ளைகளையும் தங்களின் பிள்ளையாக நினைத்து அவர்களுக்கு ஏற்ற வழியை காட்டி வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு கை பிடித்து அழைத்து செல்லும் ஒரே உறவு ஆசிரியர்கள் தான்.
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
1. கல்வியில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் இருக்கும் எங்கள் இதயம் கவர்ந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
2. வாழ்க்கைக்கு புதிய வழியை காட்டும் வழிக்காட்டியாக இருக்கும் ஆசான்களே எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
3. வெறும் ஆசிரியராக இருந்ததற்கு நன்றி; நீங்கள் ஒரு அற்புதமான வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் மூலமாகவும் இருந்தீர்கள். இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
4. மாணவர்களின் மனதில் பாடத்திட்டத்திற்கு அப்பால் இதயங்களை வழிநடத்தும் ஆசான்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
5. பாடப்புத்தகங்கள் மற்றும் பாடங்களுக்கு அப்பால், விலைமதிப்பற்ற வாழ்க்கைப் பாடங்களைச் சொல்லி தரும் ஆசிரியர்களே நீங்கள் எங்கள் ஆயுளையும் சேர்த்து வாழ வேண்டும்.
அந்த வகையில் ஆசிரியர் தினத்தை கௌரவிக்கும் விதமாக அவர்களின் பெறுமைகளை சில வார்த்தைகளில்,..
- நமக்கு உலகை காட்ட நம்மை செதுக்கியவள் தாய்.. உலகிற்கு நம்மை காட்ட செதுக்கியவர்கள் ஆசிரியர்கள்.
- இன்றைய மாணவர்கள் நாளைய தூண்கள்.. அந்த தூண்களை வடிவமைப்பது ஆசிரியர்கள் தான். எங்கள் மூளையில் ஆணியாய் அடிக்கப்பட்ட அறிவு.. தீபமாய் ஏற்றப்பட்டது ஆசிரியர்களினால் தான்.
- ஒரு ஆசிரியர் இருக்கும் ஊரில் நூறு மருத்துவர்கள், காவலர்கள், பொறியியலாளர்கள், சமூக சித்தனையாளர்கள் உருவாகிறார்கள்.
- ஒரு ஆசிரியர் உருவாகும் ஊரில், நூறு கெட்டவர்கள் மறைந்து போகிறார்கள்.
- ஒரு ஆசிரியர் ஆயிரம் புத்தகங்களுக்கு சமம். அவரை ஆழ்ந்து படிக்கும் போது ஒருவர் ஞானி ஆகி விடுகிறார்.
- நம்மை கற்பித்த ஆசிரியர்களையும், நமக்கு வாழ்க்கையை பழக வைத்த ஒவ்வொரு ஆசிரியரையும் அங்கீகரித்து மரியாதை செய்யும் நாள் ஆசிரியர் தினம்.