மாணவியை கத்தியால் கழுத்தை அறுத்த ஆசிரியர்... பதற வைத்த காரணம்
தனது காதலை ஏற்காத பல்கலைக்கழக மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 18 வயது மாணவி. இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் தங்கி பல்கலைக்கழக வேளாண் புலத்தில் தோட்டக்கலை பட்டய படிப்பு முதலாமாண்டு படித்து வருகிறார்.
நேற்று மாலை மாணவி ஏ.டி.ஏம்.மில் பணம் எடுப்பதற்காக விடுதியில் இருந்து வெளியே வந்தார். அப்போது எதிரே வந்த வாலிபர் ஒருவர் மாணவியை ஆபாசமாக திட்டியதோடு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த மாணவி வலிதாங்க முடியாமல் அலறிதுடித்தார்.
சத்தம்கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் வாலிபரை பிடிக்க முயன்ற போது, பொலிசாருக்கு பயந்து தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், இருவரிடமும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த இளைஞர் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பிரான்சிஸ்சேவியர்(30). தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார். மாணவி அப்பள்ளியில் படித்த போது ஒருதலையாக இந்த இளைஞர் காதலித்து வந்துள்ளதாகவும், தற்போது மாணவி பல்கலைக்கழகத்தில் வேறு ஒருவருடன் பேசி பழகுவதாக தகவல் தெரிந்ததால் மாணவியின் கழுத்தை அறுத்துள்ளது தெரியவந்துள்ளது.
தற்போது பிரான்சிஸ்சேவியர் மற்றும் மாணவிக்கு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.