42 வயது ஆசிரியரை மணந்த 20 வயது மாணவி- வைரலாகும் வீடியோ
இந்தியாவில் 42 வயதான ஆசிரியருக்கும் அவரிடம் படிக்கும் 20 வயதான மாணவிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
ஆசிரியருக்கும், மாணவிக்கும் ஏற்பட்ட காதல்
பீகாரின் சமஸ்திப்பூர் நகரில் ஆங்கில பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், ஆசிரியராக சங்கீத் குமார் (42) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சுவேதா குமாரி (20) என்ற மாணவி ஆங்கிலம் கற்பதற்காக பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார்.
இதன்பின், மாணவி சுவேதா மற்றும் ஆசிரியர் சங்கீத் இருவரும் காதலில் விழுந்துள்ளனர், அவர்கள் திருமணம் செய்து கொள்வது என முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் இருவரும் கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
न उम्र की सीमा हो! बिहार के समस्तीपुर में 42 साल के टीचर को 20 साल की स्टूडेंट से प्रेम हो गया..दोनों ने राजी खुशी विवाह रचाया..वीडियो खूब वायरल हो रहा..लोग मटुकनाथ और जूली की प्रेम गाथा को याद कर रहे..वीडियो-श्री राजपूत..Edited By- @Sinhamegha8 pic.twitter.com/dVp0KfoJGW
— Prakash Kumar (@kumarprakash4u) December 10, 2022
திருமணச் சான்றிதழ்
சங்கீத் குமாரின் முதல் மனைவி பல வருடங்களுக்கு முன்னரே உயிரிழந்துவிட்டார் என தெரியவந்துள்ளது.
சங்கீத் குமார் - சுவேதா குமாரி நீதிமன்றத்தில் தங்களது திருமணச் சான்றிதழையும் பெற்றுள்ளனர். இதனிடையில் இவர்களின் திருமணம் அப்பகுதியில் விவாத பொருளாக மாறியுள்ளது.