ஜோசியரின் பேச்சை நம்பி 13 வயது சிறுவனை திருமணம் செய்த ஆசிரியை.. ஒரு வாரத்துக்கு பின் தெரிந்த உண்மை!
தன்னிடம் படிக்கும் 13 வயது மாணவனை, ஆசிரியர் ஒருவர் கட்டாய திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நவீன காலக்கட்டத்தில் கூட மூட நம்பிக்கைகளும் தொடர்ந்து அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. அப்படி, ஜலந்தரின் பஸ்தி பாவா கெல் பகுதியில் வசிக்கும் பெண் ஆசிரியைக்கு செவ்வாய் தோஷத்தினால் திருமணம் தள்ளிப் போயிருக்கிறது.
இதனால் கவலையடைந்த குடும்பத்தினர் செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபட சிறுவன் ஒருவனுடன் சம்பிரதாயமாக திருமணம் செய்தால் போதும், அதன் பிறகு ஆசிரியைக்கு வழக்கமாக திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று குடும்ப ஜோதிடர் சொல்லியிருக்கிறார். இதனால், ஜோதிடரின் வார்த்தையை அப்படியே ஏற்றுக் கொண்ட குடும்பத்தினர், தன்னுடன் பயிலும் மாணவனை வீட்டில் இருந்து டியூஷன் எடுப்பதாக கூறி, தங்கள் வீட்டிலேயே ஒரு வாரம் தங்க வைக்க முடிவு செய்துள்ளனர்.
அதன்பின்பு, மாணவனின் பெற்றோருக்கு தெரியாமல் சிறுவனுடன் கட்டாயத்திருமணத்தை முடித்துள்ளனர்.
இதனையடுத்து, ஒரு வாரத்திற்கு பிறகு வீட்டிற்கு திரும்பிய சிறுவன் நடந்த விஷயங்கள் அனைத்தையும் தனது பெற்றோரிடம் சொன்னதும், கொதித்தெழுந்த குடும்பத்தினர், காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.