பரீட்சை வினாத்தாள்களை திருத்தும் போது ரீல்ஸ் போட்ட ஆசிரியை...எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள்
பல்கலைக்கழக மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும்போது ஆசிரியர் ஒருவர் ரீல்ஸ் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வைரல் வீடியோ
நாம் பல வகையான வீடியோக்களை சமூக வலைத்தள பக்கத்தில் பார்வையிட்டு தான் வருகிறோம்.
இது தற்போது தங்களது அன்றாட நடவடிக்கைகளை ரீல்ஸ்களாக வெளியிடுவதை ஒரு வேலையாகவே இன்று பலரும் செய்து வரும் அளவிற்கு காலம் மாறியுள்ளது.
அந்த வகையில் தான் பீகாரில் பேராசிரியை ஒருவர் வெளியிட்ட ரீல்ஸ், அந்த மாநிலத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாடலிபுத்ரா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியை ஒருவர், மாணவ, மாணவிகளின் விடைத்தாள்களை திருத்தும்போது ரீல்ஸ் வெளியிட்டுள்ளார்.
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாணவ, மாணவிகள் எழுதிய பதில்களை மேலோட்டமாக கூட படித்துப் பார்க்காமல், அவற்றுக்கு மதிப்பெண் வழங்கும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
पीपीयू एग्जाम का कॉपी जांचने का रील्स इंस्टाग्राम पर वायरल, मैडम पर FIR दर्ज। pic.twitter.com/pv14DIwKsA
— Educators of Bihar (@BiharTeacherCan) May 26, 2024
ஒரு மாணவரோ, மாணவியோ பல நாட்கள் படித்து, 3 மணி நேரம் எழுதிய தேர்வுத்தாளை வெறும் 30 நொடிகளில் திருத்தி முடிப்பது அநியாயம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அந்த ஆசிரியை பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
पीपीयू एग्जाम का कॉपी जांचने का रील्स इंस्टाग्राम पर वायरल, मैडम पर FIR दर्ज। pic.twitter.com/GlnZhH4Yuk
— छपरा जिला ?? (@ChapraZila) May 26, 2024