மகனின் ஆசிரியையிடம் பணம் கேட்ட தாயிற்கு கிடைத்த லக்! இரண்டே நாட்களில் ரொக்கமாக வசூல் செய்த பதிவு
கேரளாவின் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் சுபத்ரா என்பவர் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இவரது கணவர் கடந்த ஆகஸ்ட் மாதம் திடீரென உயிரிழந்து போனதால் குடும்ப தேவைகளை சரி செய்ய மிகவும் சிரமப்பட்டு வந்தார்.
உணவுக்கு கூட கஷ்டப்படும் நிலையில் அவரது மகன் அபிஷேக்கின் ஆசிரியையான கிரிஷா ஹரிஷ்குமார் என்பவரிடம் 500 கடனாக தாருங்கள் என்றும் சுபத்ரா கேட்டுள்ளார்
இந்த நிலையில், தனது மாணவனின் குடும்பத்தினருக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டுமென கிரிஷா நினைத்து சுபத்ரா குடும்ப சூழலைக் குறிப்பிட்டு தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து நிதி திரட்டவும் முடிவு செய்தார்.
அதில் சுபத்ராவின் வங்கி கணக்கு விவரங்களையும் அவர் அதில் குறிப்பிட்டிருந்த நிலையில் கிரிஷாவின் இந்த பதிவு வேகமாக பரவ தொடங்கியது.
சுபத்ரா நிலையை அறிந்து பலரும் உதவ முன்வர 2 நாட்களில் சுமார் 51 லட்சம் ரூபாய் வரை அவரது வங்கி கணக்கில் நிதி திரட்டப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இது பற்றி பேசும் கிரிஜா, என்னிடம் சுபத்ரா 500 ரூபாய் கேட்டார். நான் 1000 ரூபாய் கொடுத்து விட்டு உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேணடும் என கூறினேன்.
அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது மிகவும் வறுமையான நிலையில் இருந்தது. குழந்தைகள் சாப்பிடுவதற்கு கூட எதுவுமில்லாத சூழல் இருந்ததால் அவருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என நினைத்தேன்" என அவர் கூறியுள்ளார்.
வறுமையால் கடன் கேட்ட பெண்ணின் குடும்ப சூழ்நிலையை மாற்றியமைத்த ஆசிரியையை பலரும் சமூகவலைத்தளத்தில் பாராட்டி வருகின்றனர்.