ராணி பயன்படுத்திய ஒரே ஒரு டீ பேக்கின் விலை இத்தனை லட்சமா? ஷாக்கிங் தகவல்
மறைந்த இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் பயன்படுத்திய பல பொருட்கள் அவரின் நினைவாக இணையத்தில் விற்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் மறைந்த இங்கிலாந்து ராணி பயன்படுத்திய டீ பேக் eBay ஷாப்பிங் தளத்தில் 9.5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ள தகவல் கடும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தை 70 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த மகாராணி 2ஆம் எலிசபெத் கடந்த செப்டம்பர் 8 அன்று உயிரிழந்தார்.

மகாராணி பயன்படுத்திய பல பொருட்கள், அவரின் நினைவாக இணையத்தில் விற்கப்பட வந்தது.
அதில் அவர் பயன்படுத்திய ஒரு டீ பேக்கும் அடக்கம்.
விற்பனைக்கு வந்த டீ பேக் இத்தனை லட்சமா?
1998 ஆம் ஆண்டு ராணி 'பயன்படுத்தியதாகக்' கூறப்படும் அந்த டீ பேக் இணையத்தில் $12,000க்கு விற்கப்படவுள்ளதாக டைம்ஸ் நவ் செய்தி தளம் தெரிவித்துள்ளது.
இது இந்திய மதிப்பில் 9.5 லட்சம் ரூபாய். 1998ஆம் ஆண்டு ஒரு முறை Pest Control Drive நடத்தியபோது, வின்ட்சர் கோட்டையிலிருந்து அந்த டீ பேக் வெளியில் கடத்தப்பட்டதாகவும், தற்போது ராணியின் மறைவுக்கு பின்னர் விற்கப்படவுள்ளதாகவும் செய்தி தளம் கூறுகிறது.
ஆனால், இது நிஜமாகவே மகாராணி பயன்படுத்திய டீ பேக் தானா என்ற சந்தேகமும் கூடவே எழுந்துள்ளது.
Teabag 'used' by Queen Elizabeth selling for $12K on eBay after death pic.twitter.com/ulxUBwggW4
— SAY CHEESE! ?? (@SaycheeseDGTL) September 9, 2022
இதனால் அது ராணி எலிசபெத் பயன்படுத்திய டீ பேக் தான் என உறுதி சான்றிதழும் கொடுத்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த moo_4024 என்ற டிவிட்டர் பயனர் பகிர்ந்த அந்த சான்றிதழில் “பின்வரும் கூற்றுகள் முற்றிலும் உண்மை என்பதை எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி தீர்மானித்துள்ளது.

இது ஒரு தேநீர்ப் பை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடவே அவர், "வரலாற்றின் முக்கிய சின்னத்தை சொந்தமாக்கிக்கொள்ளுங்கள்! விலைமதிப்பற்றது" எனவும் தெரிவித்திருந்தார்.
இவற்றைத் தவிர மகாராணியின் கையெழுத்தும், அவர் பயன்படுத்திய பார்பீ பொம்மையும் விற்பனைக்கு வந்துள்ளது.