அஷ்டம சனியைப் போலவே உக்கிரமாக ஆட்டிப்படைக்க போகும் குரு! பேராபத்தில் சிக்க போகும் 6 ராசிகள் யார் தெரியுமா?
திருக்கணித பஞ்சாங்கத்தின் படி நவம்பர் 20ம் தேதி குரு பெயர்ச்சி நிகழ உள்ளது.
பொதுவாக குரு தனது 2,5,7,9,11 ஆகிய பார்வை பலத்தால் மிக நல்ல பலனை அளிக்கக்கூடியவர்.
அந்த வகையில் ஜோதிடத்தில் முழு சுபர் என அழைக்கப்படும் குரு பகவான் மகரத்திலிருந்து கும்ப ராசிக்கு செல்வதால் கவனமுடன் இருக்க வேண்டிய ராசிகள் எவை, அவற்றிற்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை இங்கு பார்ப்போம்.
ரிஷபம்
குரு ராசிக்கு 10ம் இடத்திற்குப் பெயர்ச்சி ஆக உள்ளார். குரு 10ல் இருந்தால் பதவி பறிப்பார் என்பது விதி. இந்த காலத்தில் கடினமாக உழைத்தால் தொழிலில் மேன்மையை அடையலாம்.
வேலையில் இருப்பவர்களுக்கு வேறு வேலை மாற வாய்ப்புள்ளது. அதனால் கவனமாக இருக்க வேண்டிய முக்கிய விஷயம் உங்கள் வேலை மற்றும் செய்யும் தொழில்.
 கடகம்
கடக ராசிக்கு 2021ல் நடக்கும் குரு பெயர்ச்சியில் குரு 7ம் இடத்திலிருந்து 8ம் இடமான அஷ்டம குருவாக செல்ல உள்ளார். அஷ்டம சனியைப் போலவே, அஷ்டம குருவும் சில பாதகமான பலன்களையே தருவார். பெரும்பாலான துன்பங்கள், பிரச்னைகள் உங்களுக்கான தசா புத்தியின் அடிப்படையில் தான் நடக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம். 
கன்னி
ராசிக்கு 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்களுக்கு பெரிய பிரச்னைகள் இன்றி ஓரளவு நற்பலன்களை வழங்கி வந்தார்.
இந்நிலையில் குரு 6ம் இடமான நோய், எதிரி ஸ்தானத்திற்குச் செல்கிறார். இந்த காலத்தில் கன்னி ராசியினர் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பயணங்களின் போது கவனம் தேவை. நீங்கள் வண்டி, வாகனம் ஓட்டும் போது மெதுவாகவும் செல்வது அவசியம். பேச்சு, செயலில் கவனமாக இருக்க வேண்டும். 
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கு 2, 5ம் இடத்து அதிபதி 4ம் இடமான கேந்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார். சுப கிரகங்கள் கேந்திரத்தில் இருப்பதால் பெரியளவு நற்பலன்கள் தராது. அதே சமயம் தன அதிபதியான குரு பகவான் இதுவரை நீச்சமாக இருந்தார்.
ஆனால் தற்போது சமம் என்ற நிலைக்கு வருகிறார். குரு பகவானின் பார்வை பலன் உங்கள் ராசிக்கு சற்று சாதகமானதாக இருக்கிறது. ஓரளவு நிதி நிலை நன்றாகத் தான் இருக்கும். பொருளாதார ரீதியாக பெரிய சறுக்கல்கள் இருக்காது. இருப்பினும் வீண் செலவுகள் ஏற்படும். அதுவும் கெளரவத்திற்காக சில செலவுகள் ஏற்படும். 
மகரம்
பொதுவாக குருவின் பார்வை எந்த இடத்தில் விழுகிறதோ, அந்த இடத்திற்கான பலன்கள் சிறப்பாக கொடுப்பார் என்பது விதி.
அதே சமயம் ஒரு ராசிக்கு 2ல் குரு அமர்ந்திருப்பின், அவர் அந்த ராசிக்கு 6ம் இடமான நோய், எதிரி ஸ்தானத்தையும், 8ம் இடமான ஆயுள், துஸ் ஸ்தானத்தையும் பார்ப்பார்.
இதன் காரணமாக அந்த ராசிக்கு நோய் அதிகரிக்கும். உடல் நல பிரச்சினைகள் தொந்தரவு கொடுக்கும். குடும்பம், தொழில்,வியாபாரம், உத்தியோகம் போன்ற இடங்களில் எதிரிகள் அதிகரிப்பார்கள். இதனால் குருவின் பார்வை பலன் மோசமான பலனைத் தான் மகர ராசிக்கு தருவதாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்கு குரு பகவான் இதுவரை 11ம் இடத்தில் இருந்தார். தற்போது 12ம் இடமான விரய ஸ்தானத்தில் தன காராகன் வருவது பாதகமான பலன்கள் தருவதாக இருக்கும். அதாவது 10ம் இடத்துக்கு உரியவரான குரு 12ல் வருவதால் உங்கள் தொழில், வியாபாரத்தில் பெரியளவில் முன்னேற்றமின்மை, லாபமின்மை ஏற்படும்.
வெளியூர், வெளிநாடு செல்லுதல் போன்ற தேவையற்ற அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும்.
உங்கள் ராசிக்கு 4ம் இடத்தை குரு பார்வையிடுவதால் வெளியூர், வெளிநாடு பயணம் ஏற்படும். தாயார் உடல் நலனில் பிரச்னை ஏற்படும். உங்களின் சுகமான நிலை பிரச்சினைக்குரியதாக மாறிப்போகும்.  
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        