நெற்றியில் கணவன் பெயரை பச்சைக்குத்திக் கொண்ட பெண்- வைரலாகும் வீடியோ
நெற்றியில் கணவன் பெயரை பச்சைக்குத்திய பெண்ணின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கணவன் பெயரை நெற்றியில் பச்சை குத்திய பெண்
பொதுவாக பெண்கள் கை, கால், முதுகு, மார்பு போன்ற உடல் பகுதிகளில் பச்சைக்குத்துவது வழக்கம். ஆனால், ஒரு பெண் தன் கணவர் பெயரை தன் நெற்றியில் பச்சை குத்தியுள்ளார். தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரின் பெயரை நெற்றியில் பச்சைக் குத்திக்கொள்ள ஆசைப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, டாட்டூ பார்லர் ஊழியர் ஒரு பேப்பரில் அந்த பெண்ணின் கணவரின் பெயரை எழுதி font ஓகேவா என்று கேட்கிறார். அதற்கு அப்பெண் ஓ.கே. என்று சொல்கிறார். பின்னர், அப் பெண்ணின் நெற்றியில் இந்த எழுத்தை ஒட்டுகிறார்.
அப்போது, அந்தப் பெண் மிகவும் மகிழ்ச்சியாகவும், சைகையில் உற்சாகமாகவும் காணப்படுகிறாள். டாட்டூ கலைஞர் தனது டாட்டூ மெஷினை அப்பெண்ணின் நெற்றியில் பயன்படுத்தும்போது, அப்பெண் வலியால் அசௌகரியமாக இருந்தாள்.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடா.. கணவர் மேல் இவ்வளவு அன்பா... என்றும், இன்னும் சிலரோ இதெல்லாம் தேவையில்லாத வேலை என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
'RIP Common Sense': Bengaluru Woman Gets Husband's Name Tattooed On Forehead, Leaves Internet Divided https://t.co/S74Vvlfm45 #abstorm #Succession #instagramdown #ONEPIECE1062 #LISAXCELINE #ViratKohli𓃵 pic.twitter.com/0gJYb6k42s
— Priyanka Biswas (@Priyanka14081) May 23, 2023