டாட்டூ போட்டால் புற்றுநோய் வருமா? ஆய்வின் வெளிச்சம்
தற்போது விதவிதமாக டாட்டூ போட்டுக் கொள்வது ஒரு பேஷனாக மாறியுள்ளது.
கை , கால், முதுகு, இடுப்பைத் தாண்டி, கழுத்து, முகம் வரை பச்சைக் குத்திக் கொள்கிறார்கள். டாட்டூ போடுவதால் ஏற்படும் பாதிப்புக்களை பெரிதும் அறிவதில்லை.
மருத்துவமனைகளில், ஊசியின் மேல் உள்ள கவரை கண் முன்னே பிரிக்கா விட்டால் பலர் ஊசி போட மறுப்பார்கள். ஆனால் ஒரே ஊசியை வைத்து டாட்டூ போடுவதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் எலிகளுக்கு டாட்டூ போட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின் பின்னர் அந்த எலிகளுக்கு கல்லீரல் புற்றநோய் ஏற்பட்டது.
இது சிவப்பு மையில் டாட்டூ போட்டால் ஏற்பட்டது என கண்டறிந்துள்ளனர்.
அந்த வகையில், டாட்டூ போட்டுக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
டாட்டூ போடுவதால் ஏற்படும் விளைவுகள்
1. டாட்டூ போடும் மையில் ஆபத்தான இரசாயனங்கள் உள்ளன. இது சருமம், நுரையீரல் மற்றும் கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். அவை நரம்பு மண்டலத்தையும் பாதித்து மூளைக்கும் சில சமயங்களில் பாதிப்பை உண்டு பண்ணலாம்.
2. 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசாங்கம் வெளியிட்ட ஆய்வின்படி, டாட்டூ போடும் மையில் 83% பாலிசைக்ளிக் நறுமண ஹைட்ரோகார்பன்கள் (PAHs) உள்ளன. இது புற்றுநோயை உண்டுபண்ணும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3. டாட்டூ போடும் போது சரும உணர்திறன் உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் டாட்டூ போடக் கூடாது.
4.டாட்டூ போடும் மையில் பாக்டீரியா இருக்கலாம். இது தொற்றுநோயை ஏற்படுத்தும். மச்சங்கள் அல்லது மருக்கள் அதிகம் உள்ள சருமத்தில் டாட்டூ போட்டால் அது ஆபத்தை ஏற்படுத்தும்.
5. டாட்டூ போட்ட பின்னர் அதை லேசர் மூலம் அழிக்கலாம். இதனால் அந்த பாதிப்பில் இருந்து கொஞ்சம் தப்பிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |