panner pepper masala: புரோட்டீன் குறைபாடுக்கு தீர்வு கொடுக்கும் பன்னீர் மிளகு மசாலா... எப்படி செய்வது?
பொதுவாகவே குழந்தைகள் முதல் குழந்தைகள் முத்ல பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு தான் பன்னீர்.
பன்னீர் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பன்னீரை உலகெங்கும் உள்ள சைவ உணவாளர்கள் மட்டுமின்றி, அசைவ விரும்பிகளும் அதிகமாக நுகர்வதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
அசைவ உணவாளர்களை விடவும் சைவம் உண்பவர்களுக்கு புரோட்டீன் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். இந்த பிரச்சினைக்கு பன்னீர் சிறந்த தீர்வு கொடுக்கின்றது.
பன்னீரில் புரோட்டீன் செறிவு அதிகமாக இருப்பதால், சைவ உணவாளர்கள் போதுமான புரோட்டீன் உடலுக்கு கிடைக்க பன்னீரை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நல்லது.
மேலும் பன்னீரில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை உடலின் சரியான செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுககின்றது.
புரோட்டீன் குறைப்பாட்டை நீக்கும் பன்னீரை கொண்டு நாவூரும் சுவையில் பன்னீர் மிளகு மசாலா எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பன்னீர் - 200 கிராம்
சோள மாவு - 1 மேசைக்கரண்டி
உப்பு - 2 சிட்டிகை
இஞ்சி - 1 சிறிய துண்டு
பூண்டு - 3 பல்
பச்சை மிளகாய் - 2
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு + மேசைக்கரண்டி
சோம்பு - 1/2 தே.கரண்டி
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
பட்டை - 1 சிறிய துண்டு
கறிவேப்பிலை - 1 கொத்து
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சிறிது
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
மிளகுத் தூள் - 1 தே.கரண்டி
மல்லித் தூள் - 1 1/2 தே.கரண்டி
கரம் சமாலா - 1/2 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
தண்ணீர் - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் பன்னீரை தேவையான அளவில் சிறிது துண்டுகளாக வெட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பன்னீருடன் சோள மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இடிகல்லில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக தட்டிக் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூமானதும், பிரட்டி வைத்திருந்த பன்னீர் துண்டுகளை அதில் போட்டு நன்றாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இன்னொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஒரு தேசைக்கரண்டி அளவுக்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பட்டை, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, உப்பு தூவி வெங்காயம் பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் தட்டி வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கி, பின்னர் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து மிளகுத் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்கி, பின் சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
நன்றாக கொதித்த பின்னர் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, நீர் வற்றும் வரை வதங்கவிட்டு இறுதியில், கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த பன்னீர் பெப்பர் மசாலா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |