கூந்தல் உதிர்வு முதல் மாரடைப்பு வரை தீர்வு... தினம் ஒரு நெல்லிக்காய் போதும்
பொதுவாகவே நெல்லிக்காய் எல்லா காலங்கிலும் மலிவாக விலையில் கிடைக்கக்கூடிய ஒரு ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும்.
நெல்லிக்காயில் விட்டமின் சி, விட்டமின் ஏ, அயன், கல்சியம், மெக்னீசியம் போன்றன சத்துக்கள் செறிந்துள்ளதுடன் ,உடலில் இருக்கும் பல விதமான நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது.
சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் மருத்துத்திலும் நெல்லிக்காய் முக்கிய இடம் வகிக்கின்றது. அதுமட்டுமற்றி அழகுசாதன பொருட்களின் தயாரிப்பிலும் கூட நெல்லிக்காய்க்கு தனித்துவமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
இத்தனை மருத்துவ குணங்களை ஒருங்கே கொண்டுள்ள இந்த நெல்லிக்காயை தினசரி ஒன்று வீதம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கிய நன்மைகள்
தினடும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால்,ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தை பெற முடியும். நெல்லிக்காய் முடி வளர்ச்சியை பலப்படுத்துகிறது மற்றும் கண் பார்வை திறனையும் மேம்படுத்துகிறது.
ரத்தத்தை சுத்தப்படுத்துவதால் முகப்பரு, சருமம் வறண்டு போகுதல், சொறி சிரங்கு, சருமம் சிவந்து போகுதல் போன்ற சரும வியாதிகள் பிரச்சினைகளில் இருந்து தீர்வு கொடுக்கின்றது.
நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் இது முக்கிய மூலப்பொருளாக பயன்படுகின்றது. தினம் ஒரு நெல்லிக்காய் சாப்படுவதால் ஆரோக்கியமாக கூந்தலை பெற முடியும்.
மேலும் அசிடிட்டி, வயிற்று உப்புச பிரச்சனை என இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் சரிசெய்கிறது, சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள நெல்லிக்காய் பெரிதும் உதவுகின்றது.
நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பெரிதும் துணைப்புரிகின்றது.
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால், நீரிழிவு நோயை இலகுவாக கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
அதிக உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு தினசரி ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவது உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் உதவுகின்றது.
நெல்லிக்காயில் செறிந்துள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், செரிமான அமைப்பை வலுப்படுத்துவதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
இது கொழுப்பை எரிக்க உதவுகிறது மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை பராமரிப்பதில் முக்கிய இடம் வகிக்கின்றது.
நெல்லிக்காய் உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் ஏதேனும் அடைப்புகள் இருந்தால், அவற்றைத் தடுத்து, இதயத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால், இதில் நிறைந்துள்ள குரோமியம் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
நெல்லிக்காய் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும். நெல்லிக்காயில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், புதிய இரத்த செல்கள் உருவாகி, மறைமுகமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பைத் தடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |