தினசரி புரத தேவையை பூர்த்தி செய்யும் பன்னீர் கிரேவி... இப்படி செய்து பாருங்க
தினசரி பால் குடித்து வந்தால் அது உங்கள் உடலுக்கு தேவையான புரதச்சத்தை அளிக்கும். அதே போல் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரும் புரதத்தின் சிறந்த மூலமாக பார்க்கப்படுகின்றது.
மேலும் இதில் நிறைந்துள்ள கால்சியம், எலும்புகளை வலுவாக்குவதுடன் பற்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
உடல் எடையை கட்டுகுள் வைக்க வேண்டும் என்று போராடுவர்களுக்கு பன்னீர் சிறந்த தெரிவாக இருக்கும்.
பனீரில் அதிக அளவு கால்சியம் இருப்பதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சளி, காய்ச்சல் மற்றும் தொற்று போன்ற பொதுவான நோய்களின் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது.
ஆரோக்கியம் நிறைந்த பன்னீரில் நாவூரும் சுவையில் எளிமையாக எவ்வாறு கிரேவி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1 தே.கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
சீரகத் தூள் - 1/2 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
உப்பு - 1/4 தே.கரண்டி
பன்னீர் - 150 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
கிரேவிக்கு தேவையானவை
எண்ணெய் - 2 தே.கரண்டி
வெண்ணெய் - சிறிது
பிரியாண இலை - 1
ஏலக்காய் - 2
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே. கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தே. கரண்டி
காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 தே. கரண்டி
மல்லித் தூள் - 2 தே. கரண்டி
சீரகத் தூள் - 1 தே. கரண்டி
தக்காளி - 2 (அரைத்தது)
கரம் மசாலா - 3/4 தே. கரண்டி
தண்ணீர் - 1 கப்
முந்திரி - 5 (பாலில் ஊற வைத்தது)
காய்ச்சிய பால் - 3/4 கப்
கசூரி மெத்தி - 1 தே. கரண்டி
மிளகுத் தூள் - 1/2 தே. கரண்டி
சர்க்கரை - 1/2 தே. கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், காஷ்மீரி மிளகாய் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள முடியும்.
அதனையடுத்து பன்னீர் துண்டுகளையும் சேர்த்து 2-3 நிமிடம் வரைவில் நன்றாக வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் முந்திரியை பாலில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து வதக்கி, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, உப்பு தூவி, வெங்காயம் கண்ணாடி பதத்துக்கு வரும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வைத்து, நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அரைத்த தக்காளியை சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும். அதன் பின் அதில் கரம் மசாலாவை சேர்த்து கிளறி, 1 கப் நீரை ஊற்றி, மூடி வைத்து, 5 நிமிடம் கிரேவியை கொதிக்கவிட வேண்டும்.
அதற்கிடையில் ஒரு மிக்சர் ஜாரில் ஊற வைத்த முந்திரியை பால் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கிரேவி நன்கு கொதித்ததும், அதில் அரைத்த முந்திரி விழுது மற்றும் 3/4 கப் பாலை ஊற்றி, கசூரி மெத்தியை கைகளால் நசுக்கி சேர்த்து கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
நன்றாக கொதித்ததும் மூடியை திறந்து, அதில் வதக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை எண்ணெயுடன் அப்படியே சேர்த்து, அத்துடன் மிளகுத் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், அவ்வளவு தான் நாவூரும் சுவையில் பன்னீர் கிரேவி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
