நாவூரும் சுவையில் கலவை சட்னி... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது!
பொதுவாகவே பெரும்பாலான வீடுகளில் காலை உணவுக்கு இட்லி, தோசை செய்வது வழக்கம். அதற்கு தொட்டுக்கொள்ள வழமையாக தக்காளி சட்னி, புதினா சட்னி அல்லது தேங்காய் சட்னி தான் செய்வார்கள்.
சற்று வித்தியாசமான முறையில் சட்னி பிரியர்களை குஷியாக்கும் வகையில் எவ்வாறு கலவை சட்னி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வதக்கி அரைப்பதற்கு
எண்ணெய் - 1 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 3 பல்
வரமிளகாய் - 2
பச்சை மிளகாய் - 6
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
தக்காளி - 1 (நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
புதினா - 20 இலைகள்
கொத்தமல்லி - சிறிதளவு
துருவிய தேங்காய் - 1/4 கப்
பெருங்காயத் தூள் - 1/4 தே.கரண்டி
தாளிப்பதற்கு
எண்ணெய் - 1தே.கரண்டி
கடுகு - 1/4 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
சின்ன வெங்காயம் - 4
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதே எண்ணெயில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, வரமிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் புளி, கறிவேப்பிலை, நறுக்கிய தக்காளி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரையில் நன்றா வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் நன்றாக வதக்கிவிட்டு, அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி இறக்கி ஆறவிட வேண்டும்.
பின்னர் ஒரு மிக்சர் ஜாரில் வறுத்த பருப்புகள் மற்றும் பிற பொருட்களையும் சேர்த்து, சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்து, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
கடைசியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலையும் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், அசத்தல் சுவையில் கலவை சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |