சரும பொலிவை அதிகரிக்கும் புதினா சட்னி! வாரம் ஒரு முறை இப்படி சாப்பிடுங்க
புதினா இலைகளில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கிய நன்மைகளும், மருத்துவ குணங்களும் நிறைந்திருபதால், இது பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கின்றது.
குறிப்பாக அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், முகப்பருவை நீக்குவதில்ஆற்றல் காட்டுகின்றது.

புதினா வயிற்றுப் புழுக்களை அழிக்கவும், வாய்வுத் தொல்லையை அகற்றவும், சளி, கப கோளாறுகளுக்கும் அருமருந்தாக திகழ்கின்றது.
செரிமான கோளாறு இருப்பவர்கள் புதினாவை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. இது மலச்சிக்கலுக்கும் தீர்வு கொடுக்கும்.

முக்கியமாக சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முகப்பொலிவை அதிகரிப்பதிலும் புதினா ஆற்றல் கொண்டது.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கும் புதினாவில் அசத்தல் சுவையில் எவ்வாறு சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பழுத்த தக்காளி -4
புதினா இலை -ஒரு கைப்பிடி
எள் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 8
பூண்டுப் பல் - 15 பல்
சீரகம் - 1 தே.கரண்டி
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையானவை
எண்ணெய் - 1 தே.கரண்டி
கடுகு - 1 மேசைக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் சேர்க்காமல் எள்ளை வறுத்து தனியாக எடுத்து ஆறவிட்டு, பொடியாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதே பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, அதில் நறுக்கிய பச்சை மிளகாய், சீரகம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அதனுடன், நறுக்கிய தக்காளி, உப்பு மற்றும் புளி சேர்த்து, தக்காளியின் தோல் சுருங்கி நன்கு குழையும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர், புதினாவை சேர்த்து சுருங்கும் வரையில் வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி ஆறியவுடன், ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடாக்கி கடுகை போட்டு தாளித்து, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து, அவை பொன்னிறமாகும் வரை வறுத்து, இந்நிலையில் அரைத்த சன்னியை சேத்துயும் எள் பொடியைச் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரையில் வேகவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில், புதினா சட்னி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |