Kolhapuri Mutton Recipe: காரசாரமான கோலாப்பூரி மட்டன் குழம்பு செய்முறை
Kolhapuri Mutton Masala : ஞாயிற்றுக்கிழமை வந்தாலே பல வீடுகளில் அசைவம் சமைப்பது ஒரு வழக்கமாக இருக்கும். குறிப்பாக மட்டன் ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியான மட்டன் குழம்பை செய்து சாப்பிட்டு அலுத்துவிட்டதா?
அப்படியானால் இந்த வாரம் சற்று வித்தியாசமாக, காரமும் மணமும் நிறைந்த கோலாப்பூரி ஸ்டைல் மட்டன் குழம்பை செய்து பாருங்கள்.

பொதுவாக ரெஸ்டாரண்ட்களில் மட்டுமே சுவைக்கக் கிடைக்கும் இந்த கோலாப்பூரி மட்டன் குழம்பை, மிக எளிதாக வீட்டிலேயே தயாரிக்கலாம்.
இது இட்லி, தோசை, புரோட்டா, சப்பாத்தி, நாண், சாதம் என எந்த உணவுடன் பக்காவாக பொருந்தும் இந்த குழம்பின் சிறப்பே அதன் நறுமணமும், காரம் கலந்த மசாலா சுவையும்தான். எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன் – ½ கிலோ
பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
பெரிய தக்காளி – 1 (நறுக்கியது)
கோலாப்பூரி கறி பேஸ்ட் – 4 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
பூண்டு – 2 ஸ்பூன் ( பேஸ்ட்)
தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு

கோலாப்பூரி மசாலா பேஸ்ட் செய்ய தேவையானவை
துருவிய தேங்காய் – 4 ஸ்பூன்
மிளகு – ½ ஸ்பூன்
சீரகம் – ½ ஸ்பூன்
மல்லி விதைகள் – ½ ஸ்பூன்
அன்னாசிப்பூ – 2 எள் – ½ ஸ்பூன்
கிராம்பு – ½ ஸ்பூன்
பட்டை – 1 சிறிதளவு
காஷ்மீரி மிளகாய் – 2
பிரியாணி இலை – 1

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கவும். அதில் கோலாப்பூரி மசாலா பேஸ்ட் செய்ய கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து, மிதமான தீயில் சுமார் 2 நிமிடங்கள் வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.
வறுத்த பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து மசாலா பேஸ்டாக தயார் செய்து கொள்ளவும்.

பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
பின்னர் வதக்கிய மட்டனை தனியாக எடுத்து வைக்கவும். அதே பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடங்கள் வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி மற்றும் நறுக்கிய பூண்டை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும். அதன்பின் தேவையான அளவு உப்பு, அரைத்து வைத்துள்ள கோலாப்பூரி மசாலா பேஸ்ட் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 4 நிமிடங்கள் நன்றாக வதக்க வேண்டும்.

இப்போது வதக்கி வைத்துள்ள மட்டனை சேர்த்து, மசாலா இறைச்சியில் நன்றாகப் படுமாறு கிளறவும். பாத்திரத்தை மூடி வைத்து, அடுப்பின் தீயை குறைத்து மெதுவாக வேகவிட வேண்டும்.
மட்டன் நன்கு வெந்து மென்மையாகும் வரை சுமார் 45 நிமிடங்கள் சமைக்கவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி நன்றாக கிளறிவிட்டு, இறக்கினால் இவ்வளவு தான் அருமையான சுவையில், கோலாப்பூரி மட்டன் மசாலா குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |