நாவூறும் சுவையில் வீட்டிலேயே மாங்காய் ஊறுகாய் எப்படி செய்யலாம்?
மாங்காயை சாப்பிடும்போது, அது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. இதனால் மாங்காயை மதிய உணவுக்குப்பின்னர் எடுத்துக்கொண்டால் அது உடலுக்கு நன்மையை வழங்குகிறது.
உலகத்தில் இருக்கும் அத்தனை பேரில் யாருக்கும் மாங்காய் என்றால் பிடிக்காமல் இருக்காது. இன்றைய பதிவில் சுவையான மாங்காய் ஊறுகாய் எப்படி செய்யலாம் என்பதை பார்கலாம்.
தேவையான பொருட்கள்
ஒரு ஸ்பூன் கடுகு
கால் ஸ்பூன் வெந்தயம்
இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
ஒரு ஸ்பூன் கடுகு
4 காய்ந்த மிளகாய்
இரண்டு கொத்து கருவேப்பிலை
துருவின மாங்காய் பெரியது
1 2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
1/2 ஸ்பூன் உப்பு
அரை ஸ்பூன் வெல்லம்
செய்முறை
முதலில் மாங்காயை கரட் போல துருவி எடுத்து கொள்ள வேண்டும். இந்த மாங்காய் புளிப்பற்றதாக இருந்தால் சிறந்தது. பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு ஸ்பூன் கடுகு, கால் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள்.
அதனை ஒரு மிக்ஸியில் சேர்த்து தூளாக அரைத்துக் கொள்ளுங்கள். கடுகு பொரியும் வரை வறுத்து எடுத்து அரைக்க வேண்டும்.
பின்னர் இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய், ஒரு ஸ்பூன் கடுகு, 4 காய்ந்த மிளகாய், இரண்டு கொத்து கருவேப்பிலை, துருவின மாங்காய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் அதில் 2 ஸ்பூன் மிளகாய்த்தூள், அரை ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கிளரிக் கொள்ளவும் 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளுங்கள்.
இடையே இடையே கிளறி விடவும். இதன் பின் எண்ணெய்யை விட்டு மாங்காய் நன்றாக பிரியும் சந்தர்பத்தில் கடுகு, சோம்புத்தூளை இதில் சேர்த்து கிளறி விடவும்.
பின்னர் அரை ஸ்பூன் வெல்லம் சேர்த்து நன்கு கிளறி விடவும். என்ணை நன்கு பிரிந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.
இப்போது சுவையான மாங்காய் ஊறுகாய் தயார். இதனை நீங்கள் ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம் எண்ணெய் அதிகமாக ஊற்றி சமைத்தால் ஒரு மாதம் கூட வைத்து சாப்பிடலாம்.