பார்த்தலே பசியை தூண்டும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள்

Cancer Brinjal Healthy Food Recipes Diabetes Immune System
By Vinoja Jun 14, 2025 03:50 PM GMT
Report

பொதுவாகவே எல்லா காலங்களிலும் பெற்றுக்கொள்ளக்கூடிய கத்தரிக்காயில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் செறிந்து காணப்படுகின்றது.

ஆபத்தின் போது விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? அறிவியல் காரணம் இது தான்!

ஆபத்தின் போது விமானப் பயணிகளுக்கு ஏன் பாராசூட் கொடுப்பதில்லை? அறிவியல் காரணம் இது தான்!

கத்தரிக்காய் கொழுப்பைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கச் செய்கின்றது. மேலும் தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜி பிரச்சினை உள்ளவர்களும் பிஞ்சுக் கத்தரிக்காயினை சாப்பிடலாம்.

பார்த்தலே பசியை தூண்டும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள் | Tasty Ennai Kathirikkai Kuzhambu Recipe In Tamil

 புற்றுநோய் கிருமிகளுக்கு எதிராகப் போராடும் தன்மை கொண்டதாகவும், மேலும் சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கும் காய்களில் ஒன்றாக கத்தரிக்காயும் உள்ளது.இவ்வளவு மருத்துவ நன்மைகள் நிறைந்த கத்தரிக்காயை பெரும்பாலும் குழந்தைகள் தவர்த்துவிடுகின்றனர்.

குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிடும் அளவுக்கு நாவூரும் சுவையில், எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

பார்த்தலே பசியை தூண்டும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள் | Tasty Ennai Kathirikkai Kuzhambu Recipe In Tamil

தேவையான பொருட்கள்

கத்திரிக்காய் - 300 கிராம்

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி 

உப்பு - சுவைக்கேற்ப

வதக்கி அரைப்பதற்கு தேவையானவை

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 10 பல் 

தக்காளி - 1 (நறுக்கியது) 

சீரகம் - 1 தே.கரண்டி 

மிளகு - 1 தே.கரண்டி

மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி

மல்லித் தூள் - 2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)

பார்த்தலே பசியை தூண்டும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள் | Tasty Ennai Kathirikkai Kuzhambu Recipe In Tamil

தாளிப்பதற்கு தேவையானவை

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

கடுகு - 1/2 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி

வெந்தயம் - 1/2 தே.கரண்டி

பெருங்காயத் தூள் - 1/2 தே.கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து 

உப்பு - சுவைக்கேற்ப 

புளி - பெரிய எலுமிச்சை அளவு 

கெட்டியான தேங்காய் பால் - 1/2 கப்

வெல்லம் - சிறிதளவு 

பார்த்தலே பசியை தூண்டும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள் | Tasty Ennai Kathirikkai Kuzhambu Recipe In Tamil

செய்முறை

முதலில் கத்திரிக்காயை சுத்தம் செய்து கீறிவிட்டு, தண்ணீரில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து,  எண்ணெய் ஊற்றி சூடானதும், கத்திரிக்காயை சேர்த்து, சிறிது உப்பு தூவி மிதமான தீயில் நன்றாக வதக்கியெடுத்து ஒரு தட்டில் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதே எண்ணெயில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் தக்காளியையும் சேர்த்து மென்மையாகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும். 

பார்த்தலே பசியை தூண்டும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள் | Tasty Ennai Kathirikkai Kuzhambu Recipe In Tamil

பின்னர் அதனுடன் சீரகம், மிளகு சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி குளிரவிட வேண்டும். பின்னர் அதனை ஒரு மிக்சர் ஜாரில்  சேர்த்து, அத்துடன், மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து,  எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கிளறி, நன்கு பச்சை வாசனை போகம் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.

பார்த்தலே பசியை தூண்டும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு... இப்படி செய்தால் பிடிக்காதவர்களும் சாப்பிடுவார்கள் | Tasty Ennai Kathirikkai Kuzhambu Recipe In Tamil

பின்பு அதில் புளிச்சாற்றினை சேர்த்து கிளறி சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குழம்பு சுண்டும் வரை கொதிக்க விட வேண்டும்.

குழம்பு பதத்திற்கு வந்ததும் அதில் வதக்கி வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து, அத்துடன் சிறிது வெல்லத்தை சேர்த்து கிளறி, மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து, 10 நிமிடம் நன்கு எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விட்டு இறக்கினால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்.  

செட்டிநாடு பாணியில் வெஜிடபிள் பிரியாணி... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

செட்டிநாடு பாணியில் வெஜிடபிள் பிரியாணி... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US