இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முட்டை குழம்பு... ஒரு முறை இப்படி செய்து அசத்துங்க
பொதுவாகவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளின் பட்டிலில் முட்டை முக்கிய இடம் வகிக்கின்றது.
எல்லா காலங்களிலும் மலிவு விலையில் பெற்றுக்கொள்ள கூடிய முட்டையில் ஊட்டச்சத்துக்களும் நிறைவாக காணப்படுகின்றது.
ஒருவர் தினசரி உணவில் இரண்டு முட்டைகளை தாராளமாக எடுத்துக்கொள்ள முடியும். இதய ஆரோக்கியம் முதல் கூந்தல் ஆரோக்கியம் வரையில் முட்டை முக்கிய பங்கு வகிக்கின்றது.
இப்படி ஊட்டச்த்துகள் நிறைந்த முட்டையை வைத்து அசத்தல் சுவையில் எவ்வாறு முட்டை குழம்பு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 3 (அரைத்தது)
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 4
அன்னாசிப்பூ - 1
சோம்பு - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை -1 கொத்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி
தக்காளி - 2 (அரைத்தது)
மிளகாய் தூள் - 2 தே.கரண்டி
மல்லித் தூள் - 3 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
கரம் மசாலா - 1/2 தே.கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
முட்டை - 6 (வேக வைத்தது)
அரைப்பதற்கு தேவையானவை
தேங்காய் - 1/4 மூடி
சோம்பு - 1 தே.கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அரைத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை அதில் போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கியபின்பு அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு தேங்காய் மற்றும் சோம்பு ஆகியவற்றை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்து, அந்த விழுதையும் குழம்பில் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கி, குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து 10 நிமிடங்கள் வரையில் கொதிக்கவிட வேண்டும்.
கடைசியாக வேக வைத்துள்ள முட்டைகளை நான்கு பக்கமும் கீறி விட்டு, குழம்புடன் சேர்த்து கிளறி 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கினால் அவ்வளவு தான், சுவையான முட்டை குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |