எண்ணற்ற மருத்துவ குணம் கொண்ட பீட்ரூட்டில் சட்னி செய்யலாமா? இப்படி செய்து பாருங்க
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, பீட்ரூட் மிக அவசியம் என்று உணவு வல்லுனர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அன்றாட உணவில் பீட்ரூட்டை வேர்த்துக்கொள்வதால் பல்வேறு நோய் ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பு பெமுடிகின்றது.
பீட்ரூட்டில் இரும்புச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜன் ஏற்றம் ஆகியன நிறைந்து காணப்படுவதால், இது ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக கருதப்படுகிறது.
மேலும் குறைந்த கலோரிகள் அதிக நார்ச்சத்து கொண்டுளதால் உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு இது மிகச்சிறந்த தெரிவாக இருக்கின்றது.
பீட்ரூட் உடல் ஆரோக்கியத்தோடு சரும ஆரோக்கியம், கூந்தல் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கும் நன்மை தவிக்கிறது. ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்ட பீட்ரூட் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றது.
இத்தனை மருத்துவ குணங்கள் கொண்டுள்ள பீட்மை வைத்து அசத்தல் சுவையில் எவ்வாறு சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 1
பச்சை மிளகாய் - 2
புதினா - சிறிதளவு
சீரகம் - 1/2 தே.கரண்டி
உப்பு - சுவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எலுமிச்சை - பாதியளவு
துருவிய தேங்காய் - 1/4 கப்
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 2 தே.கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
முதலில் பீட்ரூட்டை சுத்தம் செய்து தோலை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கிக் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து நறுக்கிய பீட்ரூட், பச்சை மிளகாய், புதினா, சுவைக்கேற்ப உப்பு, கொத்தமல்லி ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, ஒரு முறை அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் எலுமிச்சையின் சாற்றினை பிழிந்துவிட்டு, துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்தில் எடுத்துக்டிகொள்ள வேண்டும்.
அதன் பின்பு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு பாத்திரிரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், அவ்வளவு தான் ஆரோக்கியம் நிறைந்த அசத்தல் பீட்ரூட் சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |