Tomato Chutney: நாவூரும் சுவையில் தக்காளி சட்னி: இந்த 2 பொருளை சேர்த்துக்கோங்க
பொதுவாகவே இந்திய உணவுகளில் சட்னி வகைகள் தனித்துவமான இடத்தை பிடித்துள்ளது. அதிலும் தக்காளி சட்னிக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றது என்றால் மிகையாகாது.
குறிப்பாக இட்லி ,சோசைக்கு தக்காளி சட்னி தான் பெரும்பாலானவர்களின் விருப்பத்தெரிவாக இருக்கும்.

வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பும் வகையில் தக்காளி சட்னியை எப்போதும் போல் அல்லாது சற்று வித்தியாசமான சுவையில், கெட்டியான பதத்தில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
தக்காளி - 2
வர மிளகாய் - 5
உளுந்து - 1 தே.கரண்டி
வேர்க்கடலை - 1 தே.கரண்டி
இஞ்சி - ஒரு துண்டு
வெல்லம் - சிறிய
துண்டு - தேங்காய்
கால் கப் -
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் -1 தே.கரண்டி

தாளிக்க தேவையானவை
கடுகு - அரை தே.கரண்டி
எண்ணெய் - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை
முதலில் தக்காளியை துண்டுகளாக நறுக்கியும் இஞ்சியை தோல் சீவி துண்டுகளாக நறுக்கியும் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் உளுந்தம் பருப்பு, வேர்க்கடலை மற்றும் வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து, பருப்பு பொன்னிறமாக மாறும் வரையில், வறுத்துத்தெடுத்து, அதனை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி ஆறவிட வேண்டும்.

பின்னர் இஞ்சி மற்றும் தக்காளி ஆகியவற்றை சேர்த்து தக்காளி மென்மையாக மாறும் அளவுக்கு நன்றாக வதக்கி அதனையும் ஆறவிட வேண்டும்.
அவை இரண்டு பொருட்களும் நன்றாக ஆறியபின்னர் வெல்லம் மற்றும் தேங்காய் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்டாக அரைத்து ஒரு கிண்ணத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கடுகு பொரிந்ததும் சட்னியில் சேர்த்து நன்கு கிளறினால் அவ்வளவு தான் அருமையான சுவையில் தக்காளி இஞ்சி சட்னி தயார். இந்த தக்காளி சட்னிக்கு அதிக சுவை சேர்ப்பதே இஞ்சி மற்றும் வெல்லம் தான்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |