Milk Poha: வெறும் 10 நிமிடத்தில் ஆரோக்கியமான காலை உணவு
பொதுவாகவே இல்லதரசிகளுக்கு மதிய மற்றும் இரவு உணவு தயாரிப்பதை விடவும் காலை உணவு தயாரிப்பது தான் பெரும் சவாலான விடயம்.
ஏனென்றால், காலையில் வேலைக்கு செல்லும் கணவன் மற்றும் பாடசாலைக்கு செல்லும் குழந்தைகள் என வீடே பரபரப்ப்பாக இருக்கும் அதிலும் வீட்டில் வயதானவர்கள் இருந்தல் அவர்களுக்கு தேவையானதையும் செய்து கொடுக்க வேண்டும்.
இந்த பிரச்சினைக்கு முடிவுகட்டனுமா? காலையில் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் சமைப்பதுடன் விரைவாகவும் சமைப்பதற்கு அசத்தல் சுவையில் பால் போஹா எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
1 கப் அவல்
¾ கப் பால்
2 தேக்கரண்டி சர்க்கரை
2 தேக்கரண்டி தேங்காய்
ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள்
1 தேக்கரண்டி வெண்ணெய்
நட்ஸ்( உலர்ந்த திராட்சை,முந்திரி )- தேவைக்கேற்ப
தண்ணீர்- தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் ஒரு பத்திரத்தில் அவலை எடுத்து, அதில் மூழ்கும் அளவை விட சற்று அதிகமாக தண்ணீர் ஊற்றி, மூடி 5-10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் தொட்டு மென்மையாக இருக்கிறதா இல்லையா என்று பாருத்து, இரண்டு முறைகழுவி தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் தேங்காய், சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் அதனுடன் வெண்ணெய் மற்றும் பால் ஆகியவற்றை சுட வைத்து சேர்த்து நன்கு கலக்கவும்.
இறுதியான நட்ஸ் மற்றும் உலர்ந்த திராட்சை சேர்த்து பரிமாறினால், அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த பால் போஹா தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |