November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது?
ஒவ்வொரு புதிய மாதமும் நம் வாழ்வில் புதிய நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்துகிறது என்றால் மிகையாகாது.
அந்த வகையில், நவம்பர் மாதம் உங்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரப்போகிறது என்பதை அறிந்துக்கொள்ள பெரும்பாலானவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும்.

ஜோதிடம், எண் கணிதம் ஆகியவற்றைப் போலவே, டாரோட் கார்டு கணிப்புகளும் பலரது கவனத்தை ஈர்த்து வருகின்றன. ஒருவரின் பிறந்த தேதியை அடிப்படையாகக் கொண்டு, அந்த மாதத்திற்கான டாரோட் கார்டைத் தேர்வு செய்து பலன்களை அறிந்துகொள்ளலாம்.
அந்த வகையில், டாரோட் கார்டு ரீடரான ரக்ஷனா அவர்கள், நவம்பர் மாதம் ஒவ்வொருவருக்கும் எவ்வாறு அமையும் என்பதைப் பிறந்த தேதியின் அடிப்படையில் கணித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதன் பிரகாரம் உங்கள் பிறந்த தேதி அடிப்படையில், நவம்பர் மாதம் எவ்வாறான சாதக பாதக பலன்களை கொடுக்கப்போகின்றது என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
நவம்பர் மாத சிறப்பு பலன்கள்
பிறந்த தேதி: 1, 10, 19, 28 – பாராட்டு மற்றும் புதிய தொடக்கம்
நவம்பரில் புதிய பொறுப்புகள், பாராட்டுகள் மற்றும் வேலை, தொழிலில் முன்னேற்றம் கிடைக்கலாம். குடும்பத்தினர், மேலதிகாரிகளுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
பிறந்த தேதி: 2, 11, 20, 29 – உறவுகள் மற்றும் மகிழ்ச்சி
பிரச்சனையில் இருந்த உறவுகள் சீராகலாம். குடும்ப ஆதரவால் முக்கிய பிரச்சனைகள் தீரலாம். தனிப்பட்ட விஷயங்களை அனைவரிடமும் பகிர வேண்டாம்.
பிறந்த தேதி: 3, 12, 21, 30 – வெற்றி மற்றும் வளர்ச்சி
வேலை, கல்வியில் புதிய வாய்ப்புகளும் திறமைக்குப் பாராட்டுகளும் கிடைக்கலாம். பணவரவு அதிகரிக்கலாம். யோசிக்காமல் பணம் கடன் கொடுக்க வேண்டாம்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்!
பிறந்த தேதி: 4, 13, 22, 31 – தடைகள் நீங்கி முன்னேற்றம்
நீண்ட நாட்களாகத் தடைப்பட்ட வேலைகள் மீண்டும் தொடங்கலாம். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். முக்கிய ஆவணங்களைச் சரிபார்த்துக் கையெழுத்திடவும்.
பிறந்த தேதி: 5, 14, 23 – நல்ல செய்திகள் மற்றும் வாய்ப்புகள்
எதிர்பாராத அழைப்புகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கலாம். பயணம், புதிய தொடர்புகள் மூலம் வருமானம் அதிகரிக்கலாம். அவசர முடிவுகளையும் தேவையற்ற செலவுகளையும் தவிர்க்கவும்.
பிறந்த தேதி: 6, 15, 24 – அன்பு மற்றும் செழிப்பு
காதல், திருமண உறவுகளில் பிரச்சனைகள் குறையலாம். பரிசுகள், பண உதவி மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் ஏற்படலாம். மற்றவர்களுக்காக அதிகம் செலவு செய்வதைத் தவிர்க்கவும்.
பிறந்த தேதி: 7, 16, 25 – தெளிவு மற்றும் புதிய மாற்றம்
குழப்பமான விஷயங்களில் தெளிவு கிடைக்கலாம். புதிய திறமைகளும் ஆன்மீகப் புரிதலும் வழிகாட்டலாம். தவறான புரிதலால் அன்பானவர்களைப் பிரிய வேண்டாம்.
பிறந்த தேதி: 8, 17, 26 – பணவரவு மற்றும் உழைப்புக்கான பலன்
நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கிடைக்கலாம். உழைப்பிற்குப் பாராட்டும் புதிய வாய்ப்புகளும் கிடைக்கலாம். ஆபத்தான முதலீடுகள், சொத்து தொடர்பான வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
பிறந்த தேதி: 9, 18, 27 – வெற்றி மற்றும் தன்னம்பிக்கை
நேர்காணல் மற்றும் முக்கிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கலாம். தள்ளிப்போட்ட வேலைகளை முடிக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கோபத்திலும் அவசரத்திலும் முடிவெடுப்பதை தவிர்க்க வேணடும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |