viral video: கண்ணிமைக்கும் நெடியில் சிறுத்தையிடமிருந்து தப்பிய தும்பிப்பன்றி... பதறவைக்கும் காட்சி
கண்ணிமைக்கும் நெடியில் சிறுத்தையிடமிருந்து தப்பிய தும்பிப்பன்றியின் (Tapir)அசாதாரன நீச்சல் திறமை அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தும்பிப்பன்றி (Tapir)
தும்பிக்கை பன்றி அல்லது தும்பிப்பன்றி (Tapir)எனப்படும் இந்த விலங்கு தாவர உண்ணியாகும்.
பாலூட்டி விலங்குகளான இந்த தும்பிப்பன்றிகள் பன்றியைப் போன்ற குட்டையான உடலமைப்புடன் யானையின் தும்பிக்கை போன்ற குட்டையான தும்பிக்கை அமைப்பையும் கொண்டு சற்று வித்தியாசமான அமைப்பில் காணப்படும்.
இதன் மூக்குப் பகுதி நீண்டும், எதையும் எளிதில் பற்றிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்ததாகவும் அமைந்திருக்கும்.
ஆண் தும்பிப்பன்றிகள் பிறந்த மூன்று முதல் ஐந்தாண்டுகளில் இனச்சேர்க்கைக்கு தயாராகிவிடும். பெண் தும்பிப்பன்றிகள், ஆண் பன்றிகளை விட வெகு விரைவில் இனச்சேர்க்கைக்கு தயாராகிவிடும்.
மக்கள் மத்தியில் பெரிம் அறியப்படாத இந்த விலங்கினம் அசாத்திய நீச்சல் திறனை கொண்டிருக்கும்.
அந்தவகையில் சிறுத்தையிடமிருந்து நெடிப்பொழுதில் தனது நீச்சல் திறமையால் தப்பிய தும்பிப்பன்றியின் (tapir)காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |