குடும்ப பாங்கான தான்யாவா இது? புதிய பதிவால் வாயடைத்துப்போன ரசிகர்கள்!
நடிகை தான்யா ரவிச்சந்திரன் ட்ரெண்டிங் சேலையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
நடிகை தான்யா
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானவர் தான் தான்யா ரவிச்சந்திரன்.
2016 ஆம் ஆண்டு சசிக்குமார் நடிப்பில் வெளியான பலே வெள்ளைத்தேவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்தார்.
அதனை தொடர்ந்து பிருந்தாவனம், கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன், ட்ரிக்கர், அகிலன், ரசவாதி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
விஜய் சேதுபதி உடன் நடித்த கருப்பன் திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது. அதில் தான்யாவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
இதுவரையில் குடும்ப பாங்காக கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த இவர் அண்மை காலமாக கிளாமர் கதாபாத்திரங்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் தான்யா அழகிய ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |