அப்பாவின் பெயரை பயன்படுத்தியது குற்றமா? வெளுத்து வாங்கிய தொகுப்பாளர்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வாரம் தோறும் ஒளிப்பரப்பாகி வரும் மக்களின் மனம் கவர்ந்த தமிழா தமிழா நிகழ்ச்சியயில் இந்த வாரம், கணவன் மனைவி இடையே Personal Space வேண்டும் VS வேண்டாம் எனும் தலைப்பில் சுவாரஸ்யமாக கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.
அதில் பங்கேற்ற பெண்ணொருவர் தன் பெயருக்கு பின்னால் அப்பாவின் பெயரை பயன்படுத்துவதால் தன் கணவர் சண்டையிடுவதாக குறிப்பிட்ட விடயம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

தமிழா தமிழா
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.
விஜய் தொலைக்காட்சியில், கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சியை போல், அதே பாணியில் நடைபெற்று வரும் இந்நிகழ்சிக்கும் பெருமளவாக ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.

பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த வாரம் கணவன் மனைவி இடையே Personal Space வேண்டும் VS வேண்டாம் எனும் தலைப்பில் சுவாரஸ்யமாக கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது. அதன் சில காட்சிகள் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |