தமிழா தமிழா: சீறும் சின்ன மருமகள் vs பதுங்கும் பெரிய மருமகள்! கொளுத்தி போட்ட தொகுப்பாளர்
இந்த வார தமிழா தமிழா சீறும் சின்ன மருமகள் vs பதுங்கும் பெரிய மருமகள் என்ற தலைப்பில் மூத்த மருமகள்கள் மற்றும் இளைய மருமகள்கள் என்ற இரு தரப்பினருக்கும் இடையில்,காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது.
அதில் பங்கேற்ற மூத்த மருமகள்கள் அணியினர் தங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில், இளைய மருமகள்கள் செயற்படுவதாக அரங்கில் குற்றம் சுமத்திய போது, இளைய மருமகள் அணியில் இருந்து ஒரு பெண் நாங்களும் மருமகள் தானே எங்களுக்கும் எதிர்ப்பார்ப்புகள் இருக்காதா? என கேள்வி எழுப்ப இடம்பெற்ற சுவாரஸ்யமான வாதத்தின் சில காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழா தமிழா
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியை போல், அதே பாணியில் ஜீ தொலைக்காட்சியில், நடைபெற்று வரும் இந்நிகழ்சிக்கும் பெருமளவாக ரசிகர் பட்டாளம் இருக்கின்றது.

பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த வாரம் சீறும் சின்ன மருமகள் vs பதுங்கும் பெரிய மருமகள் என்ற தலைப்பில் காரசாரமான விவாதம் இடம்பெற்றுள்ளது.
இதில் இடம்பெற்ற சில சுவாரஸ்யமான காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைராலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |