தமிழா தமிழா: தலை முடியை இழந்ததால் வாழ்க்கையே தலைகீழானது! மனதை உலுக்கும் காணொளி
இந்த வார தமிழா தமிழா நிகழ்ச்சியில், தலை முடியை இழந்ததால் வாழ்க்கை தலைகீழ் ஆனது என்பவர்கள் VS பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
அதில் பங்கேற்ற சிலரின் வாழ்க்கையில், தங்களின் வழுக்கை தலையால் திருமணம் நின்றுப்போனதாகவும், விவாகரத்து ஆனதாககவும், தங்களின் குழந்ழதையே சொட்டை என கிண்டல் செய்வதாகவும் குறிப்பிடும் சில காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழா தமிழா
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தமிழா தமிழா மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைபெற்று வெற்றி நடைபோட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக திகழ்கின்றது.
விஜய் தொலைக்காட்சியில், கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சியை போல், அதே பாணியில் நடைபெற்று வரும் இந்நிகழ்சிக்கும் பெருமளவாக ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.

பிரபல தொகுப்பாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் ஏதாவது ஒரு தலைப்பைக் கொண்டு பரபரப்பான விவாதம் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்நிலையில், இந்த வாரம் தலை முடியை இழந்ததால் வாழ்க்கை தலைகீழ் ஆனது என்பவர்கள் VS பொதுமக்கள் என்ற தலைப்பில் பல்வேறு சுவாரஸ்யமான விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதில் இடம் பெற்ற சில முக்கிய காட்சிகள் அடங்கிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |